Monday, 20 November 2023

ஏன் நகை அணியவில்லை; யாழில் பெண்ணை தாக்கிய கொள்ளையர்கள்..!!!

SHARE

வீதியில் நடந்து சென்ற பெண் சங்கிலி அணியாததால் அவரை தாக்கி விட்டு , வீதியில் தள்ளி விட்டு முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று தப்பி சென்றுள்ளது.

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டை முடித்துக்கொண்டு தனது வீடு நோக்கி குறித்த பெண் நடந்து செல்கையில் , அவரை மோட்டார் சைக்கிள் ஒன்றில் தங்கள் முகங்களை மறைத்து துணியால் கட்டிடியவாறு பின் தொடர்ந்த இருவர் அப்பெண்ணின் கழுத்தில் கை வைத்துள்ளனர்.

அதன் போதே அப்பெண் கழுத்தில் தங்க நகைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை என தெரிந்து கொண்டதும் அப்பெண்ணை தாக்கி விட்டு , வீதியில் தள்ளி விழுத்தி விட்டு முகமூடி கொள்ளையர்கள் தமது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர்.
SHARE