Tuesday, 21 November 2023

பேருந்தில் மிதி பலகையிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு..!!!

SHARE

கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த அரச பேருந்தில் பயணித்த தம்பதியினர் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.

நேற்று (2023.11.20 ) காலை சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு - சிலாபம் வீதியில் தன்டுகம விமானப்படை வீதித் தடைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர் அம்பலன்முல்ல சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த ஆண் மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE