72 வயதிலும் முள்ளியவளை அகிலம்மா தங்கங்கள் வென்று சாதனை..!!! (Video)
சாதனைக்கு வயது ஒரு தடையல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக முள்ளியவளை சேர்ந்த 72 வயது அகிலம்மா தங்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.
அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி.அகிலத்திருநாயகி இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
கலந்துகொண்ட போட்டிகளாவன,
1500m ஓட்டம் , 5000m விரைவு நடை போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும்
800m ஓட்டத்தில் வெங்கலப் பதக்கத்தினை பெற்றுக்கொண்டதோடு
5000m ஓட்டத்தில் கலந்து கொண்ட அகிலம்மா நான்காம் இடத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.