மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். அளவுக்கு மீறின கோபமும் கூடாது. அளவுக்கு மீறின சந்தோஷமும் கூடாது. உங்களை நீங்கள் தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் நின்று நிதானமாக யோசித்து, பெரியவர்களின் ஆலோசனையை பெற்று ஒரு முடிவு எடுக்கவும். பொறுமை கடலிலும் பெரியது என்ற வரிகளை என்று நீங்கள் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி காரர்களுக்கு இன்று நினைத்துப் பார்க்க முடியாத நல்லது நடக்கும். மனசு மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலையில் உள்ள பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். உங்களுக்கு பிடிக்காதவர்கள் எல்லாம் உங்களை விட்டு தூர விலகி செல்வார்கள். இன்றைக்கான நாள் உங்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல் செல்லும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நடக்கக்கூடிய நாளாக அமையும். அக்கம் பக்கத்தில் வீட்டில் இருப்பவர்களுடைய நட்பு நன்மையை கொடுக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். வியாபாரிகளுக்கு நல்லது நடக்கும். விவசாயம் தொழில் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி காணக்கூடிய நாளாக அமையும். பேச்சாளர்கள், பாடகர்கள், நடனமாடுபவர்களுக்கு, இன்று சிறப்பான நாளாக இருக்கும். மற்றபடி உங்களுடைய வேலை தொழில் எல்லாம் எப்போதும் போல செல்லும். பெரிய அளவில் தடைகளோ கஷ்டங்களும் இருக்காது. எதிர்காலத்திற்கு தேவையான நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் பயன்படுத்திக்கோங்க.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் நிறைந்த நாளாக இருக்கும். ஓய்வு எடுக்க வேண்டும் என்று தோணும். வேலையில் கவனம் இருக்காது. சின்ன சின்ன பிழைகள் ஏற்படும். பரவாயில்லை உங்களுக்கு உதவியாக உடன் வேலை செய்பவர்கள் அனுசரித்து இருப்பார்கள். குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெறக்கூடிய நாள் இது. பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். கார்த்திகை தீபத்திற்கு தேவையான வேலைகளை செய்ய தொடங்கியிருப்பீர்கள். பெண்களுக்கு இன்று மனநிறைவான நாளாக அமையும். சுப செலவுகள் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த நல்லது நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்க்காத நல்லது நடக்கும். அதாவது நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். நடக்கவே நடக்காது என்ற நல்ல காரியங்களை எல்லாம் இன்று முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் நினைத்து பார்க்காத வெற்றியை அடைவீர்கள். வாரா கடன் வசூலாகும். நிதிநிலைமை சீராகும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். வருமானம் உயர, பதவி உயர நிறைய வாய்ப்புகள் இருக்குது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொழிலை விரிவு படுத்தலாம். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்களுக்கு கூட நல்ல வியாபாரம் நடக்கும். சுறுசுறுப்போடு உங்கள் கடமைகளை செய்தால் எதிர்பார்க்காத லாபத்தை பெறுவீர்கள். விடாமுயற்சி இன்று உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் கொஞ்சம் அனுசரணை தேவை. குறிப்பாக பெண்கள் விட்டுக் கொடுத்து நடந்தால் சந்தோஷம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமங்கள் இருக்கும். எடுத்த காரியத்தில் அவ்வளவு எளிதில் வெற்றி காண முடியாது. அதற்காக சும்மாவே இருக்காதீங்க. முயற்சிகளை மேற்கொள்ளலாம். நிலம் வீடு வாங்கக்கூடிய பெரிய பெரிய வேலைகளை மட்டும் நாளை தள்ளிப் போடுங்கள். பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையில் உஷாராக இருக்கணும். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். மனசு லேசாகும். நீண்ட நாள் துயரம் நீங்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். மனதிற்குப் பிடித்தவர்களை கரம் பிடிப்பீர்கள். சுப காரிய நிகழ்ச்சிகள் நிச்சயிக்கப்படும். சந்தோஷம் நிறைந்த இந்த நாளில் குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளுங்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் கொஞ்சம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ரொம்பவும் மன அழுத்தத்தோடு இருக்காதீங்க. பிரச்சனைகள் யாருக்குத்தான் இல்லை. பணகஷ்டம் யாருக்குத்தான் இல்லை. எப்போதுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகும். உடல் ஆரோக்கியம் மேம்பட மனதை அமைதி படுத்தவும். டென்ஷனோடு இருக்காதீங்க. டென்ஷனை குறைக்க நல்ல பாட்டு கேளுங்க சின்ன பிள்ளைகளுடன் நேரத்தை கழிக்கவும் கோவிலுக்கு செல்லவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் மன வருத்தமான நாளாக தான் இருக்கும். செய்த தவறை எண்ணி வருத்தப்படுவீர்கள். செய்த தவறுக்கு உண்டான மன்னிப்பையும் தக்க நபரிடம் கேட்டு விடுவீர்கள். இன்று மாலைக்குள் உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும். கவலைப்படாதீங்க. விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை, என்ற தாரக மந்திரத்தை மனதில் நினைத்தால் நீங்கள் ஜெயிக்கலாம்.