சனி நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 24 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப் போகுது..!!!
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரங்களையும் அவ்வப்போது மாற்றுகின்றன. அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அதுவும் நவகிரகங்களில் சனி பகவானின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றம் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 24 ஆம் திகதி சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி நிகழவுள்ளது.
இப்பெயர்ச்சியின் போது சனி பகவான் சதய நட்சத்திரத்திற்கு செல்கிறார். சதய நட்சத்திரமானது ராகுவின் நட்சத்திரமாகும். சனி பகவான் கும்ப ராசியில் ராகுவின் நட்சத்திரத்தில் பயணிப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு ஏராளமான வெற்றியும், பணமும் சேரும். இப்போது சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சனியின் நட்சத்திர பெயர்ச்சி
ஜோதிடத்தின் படி, சனி பகவான் 2023 நவம்பர் 24 ஆம் திகதி மாலை 3.04 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் 2024 ஏப்ரல் 06 ஆம் தேதி வரை பயணிப்பார். இதனால் அடுத்த 5 மாத காலம் சனி பகவான் சில ராசிக்காரர்களுக்கு நற்பலனை வாரி வழங்குவார்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். சிலரது நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளைப் பெறக்கூடும். பணிபுரிபவர்கள் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
சனி பகவானின் அருளால் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். நீண்ட காலமாக ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், இப்பெயர்ச்சிக்கு பின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வெற்றிகளை வழங்கப் போகிறது. முக்கியமாக கடின உழைப்புக்கான பலன் இரட்டிப்பாக கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் நல்ல வேலை கிடைக்கும்.
வெளிநாடு செல்ல முயற்சித்து வந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன் வேலை செய்வோரிடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கும் சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியானது நற்பலனை வாரி வழங்கும். குறிப்பாக தொழில் வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கும். சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும் மற்றும் அவருடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். கூட்டுதொழில் செய்து வந்தால், நல்ல லாபத்தைப் பெறலாம். வியாபாரிகள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். மொத்தத்தில் சனி பகவானின் அருளால் நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும்.