Thursday, 23 November 2023

இன்றைய ராசிபலன் - 23.11.2023..!!!

SHARE

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று கோபப்படும் அளவுக்கு பிரச்சனைகள் வரும். ஆனால் உங்களை நீங்கள் தான் கண்ட்ரோல் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்சனையாகிவிடும். கோபத்தை குறைக்கணும். வார்த்தைகளில் கவனமாக பேசணும். வார்த்தைகளை கொட்டி விட்டால் அல்ல முடியாது. நீங்க தெரிஞ்சு பேச மாட்டீங்க. தெரியாமல் பேசி இருந்தாலுமே, பின்பு வருத்தப்பட்டாலும் காயுமானவர்களுடைய மனது கஷ்டப்படுத்தத்தான் செய்யும் ஜாக்கிரதை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆனால் தன்னம்பிக்கையோடு எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்பீர்கள். பாராட்டுகள் கிடைக்கும். இதனால் நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பிரச்சனை இருக்காது. செலவுக்கு ஏற்ப வருமானம் இருக்கும். மனது நிம்மதி அடையும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை செய்து முடித்துவிடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் வரக்கூடிய சங்கடங்களை பிரச்சனைகளை நூதனமான முறையில் தீர்த்து வைப்பீர்கள். இன்றைக்கு நீங்கள் யோசிக்கும் விஷயங்களை வேறு யாராலும் யோசிக்க முடியாது. அந்த அளவுக்கு உங்களுடைய புத்தி கூர்மை வேலை செய்யப் போகிறது. பாராட்டு கிடைக்கப் போகிறது.

கடகம்

கடக ராசி காரர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்புகள் தலைமேல் வந்து விழும். எரிச்சலோடு பேசுவீர்கள். யாரைப் பார்த்தாலும் கோபம் வரும். எந்த வேலையை எப்படி செய்வது என்று தெரியாமல் திணறுவீர்கள். இந்த சூழ்நிலையில் மனதை அமைதிப்படுத்துவது தான் முதல் வேலை. எந்த வேலையை எப்படி செய்யணும் என்று ஒரு பிளான் பண்ணிக்கோங்க. பிறகு வேலையை செய்ய தொடங்குங்கள். குழப்பமான மனநிலையில் எந்த முடிவையும் எடுக்காதீங்க.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவி சண்டைகள் சரியாகும். அலுவலக பணியாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, சொந்த தொழிலாக இருந்தாலும் சரி, பெரிய அளவில் பிரச்சினைகள் வர வாய்ப்புகள் இல்லை. யாராவது விளையாட்டாக ஏதாவது சொன்னால் உடனே மூஞ்ச தூக்கி வச்சிக்காதிங்க. சக மனிதர்கள், சக ஊழியர்களிடம் சகஜமாக பழகுங்கள் நல்லது நடக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்காலத்திற்கு தேவைப்படக்கூடிய நிறைய நல்லதுகள் நடக்கப் போகின்றது. உதாரணத்திற்கு வங்கியில் ஃபிக்ஸ்ட் டெபாசிட் பண்ணுவீங்க. LIC போடுவீங்க. இந்த மாதிரி நிறைய நல்ல விஷயங்களை தொடங்க இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். மனைவி மகள் அம்மா அப்பா இவர்களை பற்றிய எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் நேரமும் காலமும் இன்று தான் கைகோடி வரும். இந்த வாய்ப்பை தவற விடாதீங்க.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய செலவாகப் போகின்றது. சுப காரிய நிகழ்ச்சிகள் தொடங்கும். நல்ல விஷயத்துக்கு தான் செலவு பண்ணீங்க. இருந்தாலும் செலவு செலவு தானே. கொஞ்சம் நிதி பற்றாக்குறை ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். அதையெல்லாம் சமாளித்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வரக்கூடிய இடர்பாடுகளை எதிர்கொள்ள மன தைரியம் இருக்கும். பிரச்சனை கிடையாது. காசு தான் இன்று பிரச்சனை. கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். தேர்வுக்கு அப்ளிகேஷன் போடலாம். மேலதிகாரிகளிடம் பதிவு உயர்வு சம்பள உயர்வு பற்றி பேசலாம். நல்லது நடக்கும். நல்ல செய்தி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்க வேண்டும் என்றால் விட்டுக் கொடுத்தலும், புரிதலும் அவசியம். நீ பெருசா நான் பெருசா என்று சண்டை போடுவதை நிறுத்திடுங்க.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனசு ரொம்ப ரொம்ப உறுதியாக இருக்கும். எந்த ஒரு முடிவை எடுத்தாலும் தீர்க்கமாக எடுப்பீங்க. நீங்கள் நம்பிக்கையாக பழகியவர்கள் உங்களுக்கு உறுதுணையோடு இருப்பார்கள். உறவுகள் நண்பர்களின் அருமை பெருமைகளை புரிந்து கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக்கோங்க. அலட்சியமாக எந்த ஒரு வேலையையும் செய்யாதீங்க.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புது வேலை தேடுவது, புது தொழில் தொடங்குவதுற்க்காண பிள்ளையார் சுழி போன்றவது, போன்ற காரியங்களில் செயல்படுத்தலாம். பெரியவர்களின் ஆலோசனையை கொஞ்சம் கேட்டுக்கோங்க. அடம்பிடித்து எந்த வேலையும் செய்யாதீங்க. குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டவும். கோபப்படாதீங்க பொறுமையா சொன்னா வீட்டில் இருப்பவர்கள் கேட்டுக் கொள்வார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று பதறாத காரியம் சிதறாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கோபப்படாதீங்க. அவசரப்பட்டு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்காதீங்க. தெரியாத புது தொழிலை நம்பி காலை வைக்காதீர்கள். ஆன்லைன் பிசினஸில் முதலீடு செய்யாதீங்க. இன்று எல்லா விஷயத்திலும் நீங்கள் கவனமாகவும் இருக்கணும். பொறுமையாகவும் இருக்கணும். இடியே வந்து தலையில் விழுந்தால் கூட ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது. பொறுமையாக இருந்தால் இன்றைய நாளை சாதிக்கலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் தடுமாற்றம் நிறைந்த நாளாக இருக்கும். மனைவியோடு சண்டை சில பேருக்கு வரும். எந்த விஷயமாக இருந்தாலும் ஒன்றுக்கு நூறு முறை சிந்தித்து செயல்படுங்கள். நல்ல காரியம் நடப்பதில் தாமதம் ஏற்படலாம். ஆனால் தவறு நடக்கக்கூடாது. எல்லா விஷயத்தையும் ஜாக்கிரதை, கொஞ்சம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். நன்மை நடக்கும் விடாப்பிடியாக இருந்தால் பிரச்சனை உங்களுக்குத்தான்.
SHARE