Wednesday, 22 November 2023

இன்றைய ராசிபலன் - 22.11.2023..!!!

SHARE

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று தங்களுக்குள் என்ன குற்றம் குறை இருக்கிறது என்பதை யோசிப்பீர்கள். உங்களுக்குள் இருக்கும் பிளஸ் எது, உங்களுக்குள் இருக்கும் மைனஸ் எது என்பதை நீங்களே ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவுக்கு வருவீங்க. எந்த நல்லது கெட்டதும் பிறரின் மூலம் நமக்கு வருவது கிடையாது. நாம் செய்த நல்லது கெட்டதுக்கு ஏற்ப தான் நம்முடைய வாழ்க்கை அமைகிறது என்பதை உணர்ந்து கொள்வீர்கள். நல்லதா நாலு விஷயத்தை இன்று நீங்கள் கற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று பொழுதுபோக்கில் நிறைய நேரத்தை செலவு செய்வீர்கள். மனதிற்கு பிடித்த நபரோடு ஊரை சுற்றுவீர்கள். ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவீர்கள். நிறைய பணம் காசு செலவு செய்வீர்கள். சில பேருக்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். ஆகவே வேலை செய்யும் இடத்தில் நல்லவர்கள் என்று நம்பி எந்த ரகசியத்தையும் வெளியிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் பணம் காசு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனத்தோடு இருங்க. மூன்றாவது நபர் சொல்வதை கண்முடித்தனமாக நம்ப வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை தெரியாதவர்கள் கையில் கொடுக்க வேண்டாம். குறிப்பாக பஸ்சில் போகும்போது, ஷேர் ஆட்டோவில் போகும் போது கவனமாக இருந்துக்கோங்க.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று பொறுமையோடு இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. அலுவலகப் பணியில் கெட்ட பெயர் வந்தாலும் கொஞ்சம் பொறுத்து போங்க. உங்க மனசாட்சிக்கு தெரியும் நீங்கள் தவறு செய்யவில்லை என்று. ஆகவே எந்த ஒரு விஷயத்தையும் நியாயப்படுத்த வாக்குவாதம் செய்யாதீங்க. உங்கள் பக்கம் இருக்கும் நியாயம் தானாகவே வெளிவரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களோடு வாக்குவாதம் செய்யக் கூடாது. அனுசரித்து செல்லவும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சொந்த பந்தங்களுடன் சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நம்முடைய அப்பாதானே, நம்முடைய அம்மா தானே, நம்முடைய மகன்தானே என்று உரிமையில் கூட இன்று நீங்கள் யாருக்கும் எந்த ஒரு அறிவுரையும் சொல்லக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்து கொள்ளுங்கள். யார் எதை சொன்னாலும் தலையாட்டிக் கொள்ளுங்கள். பிசினஸ் காண்ட்ராக்ட் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கையெழுத்து போடும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எல்லாம் சரியாக நடந்தாலுமே மனதில் இனம் புரியாத ஒரு சோர்வு இருக்கும். எதையோ இழுந்தது போல யோசிப்பீங்க. நல்ல காமெடியை பார்த்தால் கூட சிரிக்க மாட்டீங்க. நல்ல பாட்டு கேட்டால் கூட மனசு சந்தோஷம் அடையாது. உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசுங்க. கோயிலுக்கு போயிட்டு வாங்க. மனது லேசாகும். பிறகு உங்களுடைய வேலையை கவனத்தோடு செய்யுங்கள். கவனக்குறைவோடு எந்த வேளையிலும் ஈடுபடாதீங்க.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வரும். பழைய நண்பர்களை உறவுகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் வயதானவர்கள் அதாவது 40, 50 வயதை கடந்தவர்கள் உங்களுடைய இளமைக்காலத்திற்கு ஒருமுறை போயிட்டு வருவீங்க. கற்பனை உலகத்தில். மனசு அப்படியே லேசாகும். சில பேர் பழைய காதலன் காதலியை சந்திக்க கூட வாய்ப்புகள் உள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். நிறைய பேர் லோன் அப்ளை செய்திருப்பீங்க. அவர்களுக்கும் இன்று பணம் கிடைக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக அமையும். கையில் இருக்கும் பணத்தை வீண் செலவு செய்யக்கூடாது. சேமிப்பில் வைக்கவும். முன்கோபத்தை குறைக்கவும். வீட்டு விஷயங்களை நெருங்கிய நண்பரிடத்தில் கூட சொல்லாதீங்க.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று சிரித்துக் கொண்டே இருக்கப் போகிறீர்கள்.ஸதலை மேல் இடியே வந்து விழும் அளவுக்கு பிரச்சனை வந்தாலும் கலங்க மாட்டீங்க. மகிழ்ச்சி ஒன்றுதான் நிம்மதியைத் தரும் என்று எல்லா பிரச்சினையும் தூக்கிப் போட்டுவிட்டு, ஜாலியா இருப்பீங்க. நீங்கள் மட்டுமல்ல உங்களை சுற்றி இருப்பவர்களையும் மன மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்வீர்கள். இன்று மாலை நேரத்திற்கு மேல் சுப செய்தி செவிகளை எட்டும். நன்மைகள் நடக்கக்கூடிய நாள்தான் இது. சந்தோஷத்தை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லணும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று எடுக்கக்கூடிய முடிவுகளால் சிக்கல்கள் வர வாய்ப்புகள் உள்ளது. முக்கியமான முடிவு எடுக்க வேண்டும் என்றால் உங்கள் மனதிற்கு பட்டதை செய்யுங்கள். அண்ணன் சொல்கிறான், தம்பி சொல்கிறான், உறவுகள் சொல்கிறது என்பதற்காக எந்த முடிவையும் எடுக்காதீங்க. நின்று நிதானமாக சிந்திப்பது இன்று பிரச்சனையிலிருந்து உங்களை காப்பாற்றும். அதிக பணம் முதலீட்டை செய்ய வேண்டாம். நிறைய காசு கொடுத்து எந்த பொருளையும் இன்றைக்கு வாங்காதீங்க.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல ஓய்வுக்கான நாளாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் உங்களுக்கு பெரியதாக வேலை பளு இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். மனது தெளிவு பெறும். சந்தோஷம் இருட்டிப்பாகும். மனைவி குழந்தைகளுடன் இன்று மாலை நேரத்தில் வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை கழிக்க வாய்ப்புகள் உள்ளது. சுப செலவு ஏற்படும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த ஆரோக்கிய பிரச்சனை, இன்று சரியாகிவிடும். சில பேருக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை தலைபாரம் இருக்கும். குளிர்ந்த கால நிலை நிலவி வருவதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உடல் உபாதைகள் இருந்தால் மருத்துவரை அணுகவும். உடல் சோர்வால் வேலையில் பின்னடைவு ஏற்படும். மனைவியின் ஆதரவால் உங்கள் நிலைமை மாறும். குழந்தைகளுடைய நலனில் அக்கறை காட்ட வேண்டும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். லாபம் அதிகரிக்கும்.
SHARE