Tuesday, 21 November 2023

இன்றைய ராசிபலன் - 21.11.2023..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப நல்ல நாளாக இருக்கும். நினைத்த வேலைகளை எல்லாம் நினைத்த நேரத்தில் சரியாக செய்து முடிப்பீர்கள். மனதில் இருக்கும் பாசத்தை மனைவியிடம் வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வருமானம் பெருகும். ஆரோக்கியம் மேம்படும். மனநிறைவோடு இந்த நாளை கடந்து சென்றதற்கு தூங்கும் போது கடவுளுக்கு சின்ன நன்றி சொல்லுங்க.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். தொழிலில் புதிய முதலீட்டை போடலாம். தொழிலை விரிவு செய்யலாம். புதுசாக வேலைக்கு ஆட்களை சேர்க்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுபகாரிய செலவுக்கு சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கந்துவட்டி பக்கம் போகாதீங்க. முடிஞ்ச வரைக்கும் பேங்க்ல லோன் வாங்குங்க.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று லேசான கவலை இருக்கும். கவலைப்படாதீங்க. கவலைகள் எல்லாம் சரியாக குலதெய்வத்தை கும்பிட்டு இன்றைய நாளை தொடங்குங்க. ஜாக்கிரதையா இருக்கணும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. மூன்றாவது நபரை நம்பக் கூடாது. குடும்ப விஷயங்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. குறிப்பா நீங்க சந்தோஷமா இருக்கீங்கன்னு யார்கிட்டயும் சொல்லாதீங்க. சந்தோஷத்தை பகிர்ந்தால் இரட்டிப்பாகும் என்று அப்போ சொன்னாங்க. ஆனா இப்ப சந்தோஷத்தை பகிர்ந்தால் கண்திருஷ்டி தான் விழுது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை தைரியத்தை மனதில் வர வைத்துக் கொள்ளனும். வாழ்க்கையில் துடிப்போடு வெற்றி அடைந்தவர்களை மனசில் நினைச்சுக்கோங்க. யாருமே கஷ்டப்படாமல் முன்னுக்கு வரவில்லை என்று நினைத்து, முடிந்தவரை கஷ்டப்படுங்கள். நிச்சயம் உங்களுக்கு இன்று வெற்றி கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று வழிபாடு செய்யுங்கள். மனதில் தெளிவு பிறக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் ஒவ்வொன்றாக சரியாகிவிடும். தொழிலை விரிவுபடுத்தலாம். கூட்டு தொழில் முயற்சியில் ஈடுபடலாம். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். வாகனங்களில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுக்கவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லது கெட்டது இரண்டையும் எதிர் கொள்ள வேண்டிய நாளாக இருக்கப் போகின்றது. ஆகவே பிரச்சினை என்றால் மனசோர்வு அடையக்கூடாது. வெற்றி என்றால் மனதை ஆகாசத்தில் பறக்க விடக்கூடாது. இரண்டையும் சரியாக பேலன்ஸ் செஞ்சு வச்சுக்கோங்க. பிரச்சனை இருக்காது. மேலதிகாரிகளின் பாராட்டு மனசுக்கு நிறைவை கொடுக்கும். வீட்டில் மனைவியிடம் போட்ட சண்டை பிரச்சனையை கொடுக்கும் ஜாக்கிரதை.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். அவசர செலவுக்கு கூட கையில் பணம் இருக்காது. கடன் வாங்க வேண்டிய நிலைமை இருக்கும். பிள்ளைகளின் மூலம் சில சங்கடங்கள் உண்டாகும். பிள்ளைகளுடைய போக்கை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். வீட்டு பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடக்கணும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டிய சூழல் உண்டாகும். இந்த வேலையில் இருக்கலாமா, வேண்டாமா என்ற மன குழப்பம் கூட சில பேருக்கு ஏற்படும். ஆனா கொஞ்சம் பொறுமையாக இருப்பது நல்லது. புதிய வேலை கிடைப்பது குதிரை கொம்பு. பிரச்சனை என்று சரியாகவில்லை என்றால், அடுத்த நாள், அதற்கு அடுத்த வாரம் சரியாகிவிடும். நம்புங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். விலை உயர்ந்த பொருளை, விலை மலிவாக வாங்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். மனைவியின் பாராட்டை பெறுவீர்கள். வியாபாரத்தில் கூடுமானவரை நேர்வழியில் செல்லுங்கள். அரசாங்கத்திற்கு புறம்பாக எந்த ஒரு செயலிலும் ஈடுபட வேண்டாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் அதிகமாக இருக்கும். முக்கியமான விஷயங்களை கூடி பேசி முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அது அலுவலக வேலையாக இருந்தாலும் சரி, வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, உங்களுடைய பங்கு அதிகமாக இருக்கும். ஆகவே பொறுப்போடு எல்லா கடமைகளையும் செய்து முடியுங்கள். கடமைகளை தட்டிக் கழிக்காதீர்கள். உடன் பிரிந்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். நீண்ட நாட்களாக செய்து முடிக்க வேண்டும் என்ற நல்ல காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள் நீண்ட நாள் பிரிந்த நண்பர்கள் உறவுகள் ஒன்று சேர்வதன் மூலம் நன்மை நடக்கும். இன்று மாலை சுப செய்தி செவிகளை எட்டும். மனநிறைவு ஏற்படும். பெண்களுக்கு மாமியார் வீட்டில் இருந்து நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட நாள் குடும்ப பிரச்சனை சரியாகிவிடும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நீங்களே எந்த முடிவையும் எடுக்காதீங்க. கொஞ்சம் நின்று நிதானமாக யோசித்து, மனைவி சொல்வது, மூத்தவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்தால் நன்மை நடக்கும். பதட்டத்தோடு இருக்கும்போது எதையும் யோசித்து குழப்பிக்காதீங்க. மனதை அமைதிப்படுத்துங்கள். முதலில் மனது தெளிவடைந்தால் தான், பிறகு வாழ்க்கை நன்றாக போகும். இல்லை என்றால் வாழ்க்கையில் குழப்பத்தோடு நடமாட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கொஞ்சம் கவனத்தோடு இருங்க.
SHARE