2024 உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!
2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களில் ஒன்று இன்று (22-11-2023) உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றைய மனுவை மனுதாரர்கள் மீளபெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், 2023 A/L பரீட்சை திட்டமிட்டபடி ஜனவரி 04 முதல் 31 வரை நடைபெறும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.