Monday, 20 November 2023

இன்றைய ராசிபலன் - 20.11.2023..!!!

SHARE

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு வாரத் தொடக்கமே அமோகமாக இருக்கும். நீங்கள் நினைத்த நல்ல காரியங்கள் எல்லாம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சிக்கல்கள் இன்று காலையிலேயே சரியாகிவிடும். சந்தோஷமாக வேலைக்கு போவீங்க, சந்தோஷமா வேலை செய்வீங்க. தொழில் செய்பவர்களுக்கும் இந்த நாள் அமோகமான வெற்றியை கொடுக்கும். இன்று மாலை குடும்பத்தோடு சேர்ந்து நேரத்தை செலவழிப்பீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிம்மதியான நாளாக இருக்கப் போகின்றது. வேலைக்கு போறவங்க எல்லாம் வேலைக்கு போனாலும், பெரிய அளவில் வேலை சுமை இருக்காது. ரொம்ப ரொம்ப சுலபமாக உங்களுடைய இந்த நாள் கடந்து செல்லும். கணவன் மனைவிக்கிடையே மட்டும் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடந்துக்கோங்க. செலவை குறைக்கணும். சேமிப்பை உயர்த்தனும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். காலையில் எழுந்து வேலைக்கு செல்ல முடியாது. ஞாயிற்றுக்கிழமை வைப்ரேஷன் அப்படியே உங்களுடைய உடம்பில் இருக்கும். இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம். ஓய்வெடுக்கலாம் என்று தோன்றும். அலுவலகத்துக்கு லேட்டா போவீங்க. திட்டு வாங்குவீங்க. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சின்ன சின்ன சங்கடங்கள் வரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப ரொம்ப அழகான நாளாக இருக்கப் போகிறது. வியாபாரம் சிறப்பாக நடக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும். அழகா பேசுவீங்க. அழகா ஆடை அணிந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுடைய கவனத்தை உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள். இது எல்லா வயதினருக்கும் பொருந்தும். அழகு என்பது வயதை பொருத்தது அல்ல. மனசை பொருத்தது. அழகான நாளை கடந்து செல்ல வாழ்த்துக்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு கல்லாக கட்டும். கையில் பணம் புரளும். செலவை குறைக்கணும். சேமிப்பை உயர்த்தனும். மனைவி மனசுக்கு பிடிச்ச காரியங்களை செய்தால் இன்னும் நன்மை நடக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சங்கடமான நாளாகத்தான் இருக்கும். உடனே கவலைப்பட வேண்டாம். பிரச்சனைகளுக்கு தீர்வு காண உங்களுடைய சமோஜித புத்தி வேலை செய்யும். கடவுள் உங்கள் பக்கம் துணையாக இருக்கின்றார். அதனால் பதட்டப்படாமல் பொறுமையாக வேலையை செய்யுங்கள். பிரச்சனை வந்தால் நின்று நிதானமாக யோசித்து முடிவு எடுங்கள். புதிய முயற்சிகளை நாளை தள்ளி போடவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட்டு கடனும் வாங்க வேண்டாம். அதிக வட்டிக்கு கொடுப்பவர்களை நம்ப வேண்டாம். உஷாராக இருந்தால் இன்று ஏமாற வழி இல்லை. கண்மூடித்தனமாக முன்பின் தெரியாதவர்கள் சொல்லுவதை நம்பி எதுவும் செய்யாதீங்க. உங்களுடைய நம்பிக்கை உரியவர்கள் பேச்சை கேட்டால் நல்லது.

விருச்சிகம்

விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் வெற்றியை தரும். வரா கடன் வசூல் ஆகும். குடும்ப உறுப்பினர்கள் மேல் அக்கறை காட்டுவீர்கள். அம்மா அப்பாவுக்கு தேவையான மருத்துவ செலவை செய்வீர்கள். எல்லா கடமைகளையும் சரியாக முடித்து மன நிறைவு பெறுவீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நடக்கும். சில பேருக்கு சுப செலவுக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று வாழ்க்கையில் நிறைய அனுபவங்களை பாடமாக கற்றுக் கொள்வீர்கள். கண்மூடித்தனமாக நம்பியவர்களின் சுயரூபம் தெரியும். சூதாட்டத்திற்கு போகாதீங்க. அரசுக்கு புறமான வேலையை செய்யாதீங்க. நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்று புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்திச் செல்ல புதிய பாதை உண்டாகும். எல்லா விஷயத்தையும் மனைவியிடம் சொல்லி மனசை லேசாக்கி கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாக இருக்கும். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதையெல்லாம் தாண்டி வாழ்க்கையில் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை உங்களை இன்று கை தூக்கி விடப் போகிறது. புதிய முயற்சிகளில் வரக்கூடிய தடைகள் தான் வெற்றிப்படையாக மாறும். ஆகவே எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் துவண்டு போய் உட்காராதீங்க. முட்டி மோதி போராடினால் வெற்றி உங்கள் பக்கம் நிற்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். சில பேருக்கு மன கஷ்டத்தால் உடல்நிலை சரியில்லாமல் போகும். எல்லா பிரச்சினைகளையும் மனதில் போட்டு குழப்பாதீங்க. கடவுளுக்கு தெரியும். உங்களால் எவ்வளவு துன்பத்தை தாங்க முடியும் என்று. அவ்வளவு துன்பத்தை மட்டும் தான் கொடுப்பான். மனதை அமைதி படுத்த பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று வரவும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனசு ஆன்மீகத்தை தேடி ஓடும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். ஒரு மகான் போல அடுத்தவர்களுக்கு அட்வைஸ் செய்யக்கூடிய வாய்ப்புகள் கூட சில பேருக்கு கிடைக்கும். நீங்க பக்குவப்படுவீங்க. உங்களை சுற்றி இருப்பவர்கள் பக்குவம் அடையச் செய்வீர்கள். உங்களை பார்த்து நாலு பேர் இவனைப் போல வாழ வேண்டும் என்று சொல்லுவார்கள். அந்த அளவுக்கு உங்கள் வாழ்க்கை இன்று நல்லபடியாகவே செல்லும். வாழ்த்துக்கள்.
SHARE