Monday, 20 November 2023

இந்த வார ராசிபலன் 20.11.2023 முதல் 26.11.2023 வரை..!!!

SHARE

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இயல்பான வாரம் திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி ஏற்படும். வீன் செலவுகள் எதுவும் ஏற்படாது. உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை கவனம் தேவை. பயணங்களால் உடல் சோர்வு ஏற்படும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். பிரச்சனைகள் ஏற்படும் பொழுது அதற்குரிய தீர்வை உடன் இருப்பவர்களுடன் ஆலோசித்து பிறகு எடுக்க வேண்டும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். எனினும் அதில் கவனம் செலுத்தி செய்வதன் மூலம் அதற்குரிய பலனை அடைய முடியும். அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதன் மூலம் அவர்களின் பாராட்டை பெற முடியும். தொழிலைப் பொருத்தவரை லாபம் சுமாராகத்தான் இருக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி சுமூகமாக தொழில் நடைபெறும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். ஒரு சிலருக்கு எதிர் பாராத பண வரவும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் பணம் கொடுக்கல் வாங்கலில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். உடல் நலனை பொருத்தவரை ஆரோக்கியமான சூழ்நிலையே நிலவும். கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் இருப்பீர்கள். பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனத்துடன் செயல்பட வேண்டும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் எதிர்பார்த்த சலுகைகளை பெற முடியாது. ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிகமான லாபம் கிடைக்கும். அதனால் தொழில் ரீதியாக வாங்கிய கடன்களை தீர்க்க முற்படுவீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிறரிடம் இருந்து உதவிகள் கிடைக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த பண வரவு ஏற்படும். தேவையற்ற வீண் விரயங்கள் எதுவும் ஏற்படாது. இருப்பினும் ஒரு சிலருக்கு வீடு பழுது பார்க்க செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பயணங்களால் நன்மைகள் உண்டாக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்காது. ஒரு சிலருக்கு இடமாற்றம், பதவி மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதிகாரிகளின் முழு ஆதரவை பெறுவீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனை நீங்கி சுமூகமான சூழ்நிலை உண்டாக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனமாக செயல்பட வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக செயல்பட வேண்டும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்த வாரம் சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரிடம் பேசும் பொழுது கவனமாகவும் தேவையற்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தாமலும் இருப்பது நன்மை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று கூடுதலாக தான் இருக்கும். இருந்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கொடுத்து வேலையை செய்து முடிப்பார்கள். இருப்பினும் வேலையை முழுமையாக பிறரிடம் ஒப்படைக்காமல் பார்த்துக் கொள்வது நன்மை தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது. சுமாராக தான் இருக்கும். பங்குதாரர்களுடன் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பொறுமையை கையாளுவதன் மூலம் தொழிலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து வெளிவர முடியும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்க்கு பணவரவு ஏற்படும். செலவுகள் அதிகரித்தாலும் கடன் வாங்காமல் சமாளித்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறிது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். இந்த வாரம் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதை தவிர்க்க வேண்டும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக தான் இருக்கும். அதை திறமையுடன் செய்து முடிப்பதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும். தொழிலை பொருத்தவரை சுமாரான லாபத்தை பெறுவீர்கள். தொழில் ரீதியாக கொடுக்கல் வாங்கலில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்க்கு பணவரவு ஏற்படும். உடல் ரீதியாக இருந்து வந்த உபாதைகள் அனைத்தும் நீங்கி ஆரோக்கியமாக இருப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி சந்தோஷம் மேலோங்கும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை தென்படுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு சிலருக்கு பதவி உயர்வு, இடமாற்றம், சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிகமாக லாபம் கிடைக்கும் . அதனால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பாராட்டு கிடைக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை தேவையான அளவு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்க வாய்ப்புகள் இருக்கிறது.

வேலையை பொருத்தவரை எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். திறமையை வெளிப்படுத்தி அதன்மூலம் நன்மைகளை அடைவீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் அதிகரிக்கும். அதனால் தொழிலை விரிவு படுத்த முயற்சி செய்வீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் மிகுந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை திருப்திகரமாகவே பணவரவு இருக்கும். இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. ஒரு சிலருக்கு உடல் ரீதியாக ஆரோக்கிய கேடுகள் ஏற்பட்டு மறையும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். புத்திசாலித்தனத்தால் பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை லாபம் திருப்திகரமாக இருக்கும். தொழிலை முன்னேற்றுவதற்காக எதிர்பார்த்த உதவிகள் உங்களைத் தேடி வரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ரங்கநாத பெருமானை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை செலவிற்கேற்ற பணவரவு ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அதை எளிதாக சமாளித்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் வீடு தேடி வரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு சிறிது சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வேலையில் கவனம் செலுத்தி செய்வதால் அதிகாரிகளின் கண்டிப்பிலிருந்து தப்பிக்கலாம். தொழிலைப் பொருத்தவரை எந்த அளவுக்கு கடுமையாக உழைக்கிறீர்களோ அந்த அளவுக்கு லாபத்தை பெற முடியும். உடன் இருப்பவர்களால் மறைமுகமாக இடையூறுகளும் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகிறது. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்திலும் வெளியிடத்திலும் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து செயல்படுவதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். புதிதாக வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. ஒரு சிலருக்கு திடீரென்று பதவி உயர்வு ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். புதிதாக முயற்சிகள் மேற்கொள்பவர்களுக்கு அந்த முயற்சிகள் வெற்றி அடையும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை குறைவாகவே இருக்கும். புதிதாக வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலை பொருத்தவரை திருப்திகரமான லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். மேலும் தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் தங்கள் முயற்சிகளை தொடங்கலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் யோசித்து செயல்பட வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பண வரவிற்கு எந்தவித குறையும் இருக்காது. சிலருக்கு எதிர்பாராத பண வரவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாகவே இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை லாபம் ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். இருப்பினும் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.
SHARE