Friday, 17 November 2023

இன்றைய ராசிபலன் - 17.11.2023..!!!

SHARE

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் ரொம்ப ரொம்ப ஆர்வமா இருப்பீங்க. புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு நன்மையை கொடுக்கும். இதனால் தொழில் வியாபாரம் விரிவடையும். நிறைய பேர் கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை ஆவீர்கள். சொத்து பிரச்சனை உங்கள் பக்கம் தீர்ப்பாகும். கடன் சுமை குறைந்து மன நிம்மதி அடைவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுக்குள் ஒரு சின்ன பயம் இருக்கும். அந்த பயம் என்ன என்று தெரியாது. இனம் புரியாத பயத்தால் எல்லா விஷயத்தையும் சந்தேக கண்ணோடு பார்ப்பீங்க. இதனால் சின்ன சின்ன இழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை இன்றைக்கு நீங்கள் எந்த ஒரு புதிய முயற்சியையும் எடுக்காமல் இருப்பது நல்லது. பணம் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருந்துக்கோங்க.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அதையெல்லாம் கவனமாக முடிப்பதில் ஆர்வம் காட்டுங்கள். தேவையில்லாத நண்பர்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு நேரத்தை அனாவசியமாக கழிக்காதீங்க. கெட்ட பெயர் வரும். கடமையில் இன்று கண்ணும் கருத்தோடு இருக்கணும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று தொழில் ரீதியாக சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பாட்னரை, வியாபாரிகளை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். கடனுக்கு வியாபாரம் செய்ய வேண்டாம். மற்றபடி செய்யும் வேலை திருப்திகரமாக செல்லும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். மாமனார் வழி உறவின் மூலம் நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலை சுமை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் மன நிம்மதியான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த காரியத்தில் இன்று வெற்றி காண்பீர்கள். இந்த நாள் இறுதியில் உடல் சோர்வு ஏற்படும். வேலைகளை எல்லாம் சீக்கிரம் முடித்துவிட்டு இரவு சீக்கிரம் சாப்பிட்டு விட்டு தூங்கி நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிதானம் தேவை. எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. முன்பின் தெரியாத நபர் பேச்சை கேட்டு நடக்கக்கூடாது. எந்த ஒப்பந்தமும் இன்றைக்கு கையெழுத்து போடாதீங்க. அதேபோல இத்தனை வருடம் வேலை செய்து தான் ஆக வேண்டும் என்று அக்ரிமெண்ட் போட்டு ஒரு தொழில் தொடங்குவது, அல்லது வேலைக்கு சேர்வது போன்ற விஷயங்களை செய்யாதீங்க.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். உங்களுடைய ஐடியாவின் மூலம் மேலதிகாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மன நிறைவோடு இந்த நாளை கடந்த செல்வீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். கடன் சுமை குறையும். கணவன் மனைவி அன்பு அன்னியோன் கொடுக்கும். மன நிம்மதி பிறக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனசுக்கு பிடிச்ச நபரை சந்திப்பீங்க. அந்த நபரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் உள்ளது. அதாவது சுப காரிய நிகழ்ச்சிகள் இன்று நடக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதத்தோடு இன்றைய நாள் சிறப்பாக செல்லும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். இன்று மாலை கொஞ்சம் கவனத்தோடு எல்லா வேலையையும் செய்ய வேண்டும். பொய் சொல்லாதீங்க, மனைவியிடம் எதையும் மறைக்காதீர்கள். நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். சூதாட்டத்தில் ஈடுபடாதீர்கள். இறை வழிபாடு உங்களுக்கு இன்றைக்கு மன நிம்மதியை தரும். மாலை நேரம் முடிந்தால் ஏதாவது ஒரு கோவிலுக்கு போய் உட்காருங்க நன்மை நடக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனைகள் மனதை குழப்பும். யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று தெரியாது. உங்களை காலை வாரி விட நாலு பேர் பக்கத்திலேயே இருப்பாங்க. அவங்களை நல்லவங்கன்னு நம்புவீங்க. நல்லது செய்பவர்கள் கெட்டவர்கள் போல தோன்றுவார்கள். அதனால் இன்று எந்த முடியையும் எடுக்காதீங்க. யாரிடமும் சண்டை போடாதீங்க. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அமைதியாக இருந்தால் இன்று உங்களுக்கு நன்மை நடக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கோபம் வரும். எவ்வளவுதான் வேலை செய்தாலும் நல்ல பெயர் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் கொஞ்சம் புலம்புவீர்கள். வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். நிதி நிலைமை சீராக இருக்கும். வரக்கூடிய வருமானத்தை வைத்து எதிர்காலத்திற்கு சேமிப்பை பிளான் பண்ணுவீங்க. கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும் குழந்தைகளால் சந்தோஷம் வரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஓய்வு தேவைப்படும். ரொம்ப அலைச்சலின் காரணமாக உடல் சோர்வு இருக்கும். சேல்ஸ்மேன் வேளையில் இருப்பவர்களுக்கு சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்புகள் உள்ளது. டார்கெட்டை முடிக்காமல் மேனேஜரிடம் திட்டு வாங்கலாம். அல்லது பொய் சொல்லி மாட்டிக் கொள்ளலாம். ஜாக்கிரதையாக இருந்துகோங்க. இன்றைய நாள் உங்களுக்கு கொஞ்சம் பிக்கள் பிடுங்கல் நிறைந்த நாளாக இருக்கும்.
SHARE