இன்றைய ராசிபலன் - 16.11.2023..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகளும் புகழும் வந்து சேரும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்துக் கொண்டிருந்த காரியத்தை இன்று சாதித்து காட்டுவீர்கள். நீ எல்லாம் உறுப்படவே மாட்ட என்று சொன்னவர்கள் முன்னால், தலை நிமிர்ந்து வாழ்ந்து காட்டுவீர்கள். வாழ்க்கையை ஜெயித்து சந்தோஷம் அடையக்கூடிய நாள் இன்று. நிறைய முன்னேற்றங்கள் வாழ்க்கையில் வருவதற்கு இன்னும் அயராது உழைத்து வெற்றிக்கான வாழ்த்துக்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் சில பேருக்கு உடல் உபாதைகள் வரும். வயதானவர்களை குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். மழைக்காலம் என்பதால் வெறும் சளி தானே, இருமல் தானே என்று அலட்சியமாக விட வேண்டாம். ஒருமுறை டாக்டரை பாருங்க. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் சிறு சிறு சிக்கல்கள் வந்தாலும் பெரிய அளவில் இழப்பு இருக்காது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன அழுத்தம் கொஞ்சம் இருக்கும். எந்த வேலையிலும் அதிக கவனம் செலுத்த முடியாது. கண்ணை மூடி தூங்கினால் போதும் என்று நினைப்பீர்கள். அரைகுறை மனதோடு எந்த வேலையும் செய்யாதீங்க. கவனத்தோடு வேலை செய்யவில்லை என்றால் வரக்கூடிய சிக்கல்களையும் நீங்கள் தான் எதிர்கொள்ள வேண்டும். ஆகவே ஒரு நாள் வேலைக்கு லீவு போட்டு அமைதியா ரெஸ்ட் எடுத்துக்கோங்க. மனநிலை சரியில்லாதவர்கள் இதை செய்யுங்க. என்னால் வேலை செய்ய முடியும் என்று நினைப்பவர்கள் உங்கள் வேலையை கவனத்தோடு செய்யுங்க.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். வாரா கடன் வசூல் ஆகும். வாழ்க்கையில் இருந்த சின்ன சின்ன சிக்கல்கள் சரியாகும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். பேசாத உறவுகள் கூட வந்து பேசி விடுவார்கள். நீண்ட நாள் பகை சரியாகும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தோல்விகள் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை இன்று செய்ய வேண்டாம். வியாபாரத்தில் அதிக அக்கறையோடு இருங்கள். வேலை செய்யும் இடத்தில் அனுபவசாலிகள் சொல்லுவதைக் கேட்டுக் கொள்ளவும். நீங்களாக எதையும் முந்திரிக்கொட்டைத்தனமாக செய்யக்கூடாது. தோல்விகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. சின்ன சின்ன தோல்வி உங்களுக்கு நிறைய பாடத்தை கற்றுக் கொடுக்கும் அவ்வளவுதான்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை எல்லாம் செய்ய தொடங்கி விடுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். மழைக்காலம் என்பதால் வெளியிடங்களுக்கு செல்லும்போது கொஞ்சம் கவனமாக இருந்துக்கோங்க. கையில் குடை வச்சுக்கோங்க. வீதியில் நடந்து செல்லும் போது வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். ஹெல்மெட் போட்டுக்கோங்க.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருந்தாலும், ஆழ்ந்த சிந்தனை பல விஷயங்களை நினைவுபடுத்தும். பழைய பிரச்சினைகளை எல்லாம் நினைத்து மனசு கஷ்டப்படும். பழசை நினைத்து பார்ப்பதில் தவறு கிடையாது. ஆனால் அதன் மூலம் நம்முடைய வேலை கெடுகிறது, மனசு கஷ்டப்படுகிறது எனும் போது, கெட்டதை மறப்பது தான் நல்லது. மறதியை கடவுள் நமக்கு கொடுத்ததே இன்பமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான். அதை நீங்கள் புரிஞ்சுக்கணும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கும். நீண்ட நாள் தடைப்பட்டு வந்த சுபகாரியங்களில் வெற்றி கிடைக்கும். மனதுக்குப் பிடித்த வாழ்க்கை துணை அமையும். காதல் வெற்றி பெறும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். அனுபவசாலிகள் சொல்லுவதை கேட்டு நடந்துக்கோங்க. வேலை செய்யும் இடத்தில் நண்பர்கள் உங்களுக்கு உதவியா இருக்கா இருப்பாங்க. புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கவலை நிறைந்த நாளாக இருக்கும். அம்மா அப்பா குழந்தைகள் என்று இவர்களை பற்றி இனம் புரியாத பயம் இருக்கும். வாழ்க்கையை இனிவரும் காலகட்டத்தில் எப்படி நடத்தி செல்வோமோ என்ற ஒரு குழப்பம் மனதில் எழும். எல்லோருக்கும் இது வருவதுதான். அந்த சமயத்தில் நீங்க தைரியத்தை இழக்கக்கூடாது. கடவுள் இருக்கின்றான் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று இன்று சிந்தனை செய்தால் நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனது நிறைய இறைவனின் நினைப்புதான் இருக்கும். இறை வழிபாட்டில் அதிக ஈடுபாடு செய்வீர்கள். இன்று மாலை கோவிலுக்கு சென்று வர வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வேலை பளு குறையும். சம்பள உயர்வு பதவி உயர்வு நீங்கள் நினைத்தபடி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். முன்பின் தெரியாதவரிடம் நட்பு வைத்துக் கொள்ள வேண்டாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனைவி குழந்தைகள் என்று நேரத்தை செலவழிப்பீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கடனை திருப்பி அடைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நிதி நிலைமை மோசமாக இருந்தாலும் அதை சமாளித்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உடல் பருமனோடு இருப்பவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது நன்மை தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும். மனதை குப்பைத் தொட்டி போல வச்சுக்காதீங்க. எந்த பிரச்சினையாக இருந்தாலும் வாழ்க்கை துணையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். நல்லதோ கெட்டதோ பிரச்சினையை வெளியில் சொல்லிவிட்டால் நமக்கு பாரம் குறையும். எதையும் வாழ்க்கை துணையிடம் மறைக்க வேண்டாம். பொய் சொல்லி சமாளிக்க வேண்டாம்.