இன்றைய ராசிபலன் - 14.11.2023..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலைகளிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். கொஞ்சம் கவன குறைவு ஏற்பட்டாலும் பண இழப்பு பொருள் இழப்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலதிகாரிகள் பேச்சை கவனமாக கேட்கவும். என்ன சொல்கிறார்கள் என்பதை கவனத்தோடு கேட்டு, பின்பு செயலாற்றுங்கள். தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு தப்பு பண்ணா பிரச்சனை உங்களுக்கு தான்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா முயற்சிகளும் வெற்றியை கொடுக்கும். உதவியாக நண்பர்கள் உறவினர்கள் நிற்பார்கள். ஏதாவது சந்தேகம் இருந்தால் ஒன்றுக்கு பலமுறை பெரியவர்களிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள். தவறு கிடையாது. குருட்டுப் போக்கில் மட்டும் எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது. மற்றபடி வேலை செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும் சந்தோஷம் நிலவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் பதவிகள் பொறுப்புகள் தேடி வரும். உங்களுடைய வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பதன் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். காதலர்களுக்குள் சண்டை வர வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை. அதிகம் பேசாதீங்க. சண்டை வந்தால் விட்டு கொடுங்க. வருமானம் அதிகரிக்கும். வாராக்கடன் வசூல் ஆகும். சேமிப்பு உயரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்தையும் பிளான் பண்ணனும். அடாவடியாக எந்த ஒரு முடிவும் எடுக்க கூடாது. வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். உதவி செய்ய யாரும் இருக்க மாட்டாங்க. உபத்திரவமா நாலு பேர் வந்து நிப்பாங்க. சில இடர்பாடுகளை கடக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். பொறுமை அவசியம் தேவை. நிதானத்தோடு செயல்பட்டால் இன்று வெற்றி நிச்சயம். பதட்டப்படுவதாலோ கோபப்படுவதாலோ ஆரோக்கியம் தான் கெட்டுப் போகும். வேலை நடக்காது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்ச்சியான நாளாக இருக்கும். சில பேருக்கு மூணு நாள் லீவு முடிந்து அலுவலகம் சென்றிருந்தாலும், உங்களுடைய வேலையை கொஞ்சம் கூட குறையில்லாமல் செய்து முடிப்பீர்கள். கையில் பண பற்றாக்குறை இருக்கும். இந்த மாதத்தை எப்படி கடந்து செல்வது என்று யோசனை இருக்கும். அதிக வட்டி கந்துவட்டி வாங்காதீங்க. கூடுமானவரை செலவை குறைத்துக் கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைப்பட்ட பொருட்கள் எல்லாம் கையில் வந்து சேரும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வீட்டில் விருந்தாளிகள் எல்லாம் அவரவர் வீட்டுக்கு கிளம்பியதால் கொஞ்சம் வெறிச்சோடி காணப்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் சோர்வு இருக்கும். தீபாவளி பண்டிகையை முடித்து ரொம்பவும் கலைத்துப் போய் இருப்பீர்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்க. நல்ல ஓய்வு எடுத்துக்கோங்க.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய உடைமைகளை பத்திரமாக வச்சுக்கணும். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்களிடம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக மூன்றாவது நபரை நம்பக் கூடாது. எதிர் பாலின நட்பு கூடாது. சூதாட்டம் வேண்டாம். மற்றபடி அன்றாட வேலைகளை கவனத்தோடு செய்தால் பிரச்சனை இல்லை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். அறிவுத்திறன் வெளிப்படும். பிரச்சினை வந்தால் கூட அதை சரி செய்ய சூட்சமமான வித்தைகளை கையாளுவீர்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்கள் மனதுக்கு தோன்றிய விஷயங்களை செய்து மகிழ்ச்சியடைவீர்கள். நீண்ட தூர பயணம் வெற்றியை கொடுக்கும். பயணத்தின் போது சந்திக்கும் புது மனிதர்களின் மூலம் நல்ல அனுபவம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பல் இருக்கும். பண்டிகையை முடித்து வேலைக்கு வந்தவர்களுக்கு உடல் சோர்வு இருக்கும். இன்னும் கூடுதலாக ஒரு நாள் ஓய்வு தேவைப்படும். தூக்கம் தான் வரும். கொஞ்சம் கஷ்டம்தான் இருந்தாலும் கட்டாயம் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு, ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்க வேலை நேரத்தில் எழுந்து நடப்பது, தேவைப்பட்டால் ஒரு நல்ல பாட்டு கூட கேளுங்க. மனசுக்கு ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். டென்ஷனோடு வேலை செய்யாதிங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாள் முயற்சி செய்ததற்கு பலனாக வெற்றி கிடைக்கும். மனசு சந்தோஷப்படும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய நாள் இது. கலைத்துறையில் இருப்பவர்கள் சாதனைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு லாபம் நிறைந்த நாள் இது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். ஆண் பிள்ளைகளால் மன மகிழ்ச்சி பெறுவீர்கள். மாமியார் வழி உறவுடன் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சண்டை சச்சரவு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பெரியவர்களை எதிர்த்து பேசாதீங்க. வார்த்தைகளில் கவனம் இருக்கட்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுமையோடு செயல்பட வேண்டும். மனக்குழப்பம் இருக்கும். எல்லாம் இருந்தும் இல்லாதது போல ஒரு உணர்வு இருக்கும். தொழிலில் புதிய முடிவுகளை என்று எடுக்க வேண்டாம். பார்ட்னர் தொழிலாளர்கள் இவர்களிடம் பொறுமையாக பேசுங்கள். நேரடியா எந்த முடிவும் எடுக்காதீங்க. கடன் பிரச்சனை கொஞ்சம் கழுத்தை நெரிக்கும். காசு கொடுத்தவன் பணத்தை திருப்பி கேட்பான். உங்கள் கையில் பணம் இருக்காது. நிதானமா சொல்லி புரிய வையுங்கள். கடன்காரர் ஃபோன் பண்ணா எடுத்துப் பேசுங்க. பிரச்சனை முடியும்.