Saturday, 25 November 2023

வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 13 சிறுமிகள் மலேசியாவிற்கு கடத்தல்..!!!

SHARE

இலங்கை சிறுமிகள் மலேசியா ஊடாக வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடற்சார் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 18-க்கும் குறைந்த வயதுடைய சிறுமிகள் மலேசியாவிற்கு கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்காக சட்ட ரீதியான முறையில் கடவுச்சீட்டு பயன்படுத்தப்படுகின்றமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் போலி விமானப் பயணச்சீட்டை தயாரித்து பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு அவர்கள் கடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரை 13 சிறுமிகள் இவ்வாறு மலேசியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதனுடன் ஆட்கடத்தற்காரர்கள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
SHARE