இன்றைய ராசிபலன் - 13.11.2023..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பலதரப்பட்ட யோசனைகள் மனதை லேசாக குழப்பும். கொஞ்சம் நிதானத்தோடு இருங்கள். முன்பின் தெரியாதவர்களுடைய ஆலோசனையை அப்படியே எடுத்துக் கொண்டு, புதிய முடிவு எடுக்காதீர்கள். வேலை செய்யும் இடத்தில் சில பேருக்கு பிரச்சனைகள் வரும். சமாளிக்க பொறுமையாக பேச வேண்டும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வேகத்தோடு செயல்படக் கூடாது. விவேகத்துடன் செயல்பட வேண்டும். பிரச்சனைகள் வந்தால் சண்டை போடாதீங்க, சாதூரியமாக பேசி சமாளிங்க. அதுதான் உங்களுக்கு நன்மையை தரும். எதிரிகளை கூட கைக்குள் போட்டுக் கொள்ளும் வித்தை தெரிந்தவர்கள் இன்று சாதிப்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சின்ன சின்ன சிக்கல்கள் வரக்கூடிய நாளாக இருக்கும். சில பேருக்கு லீவு கிடைக்காமல் உடனே இன்றைய தினம் வேலையில் சேர சொல்லி பிரச்சனைகள் வரும். வேறு வழி கிடையாது அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். புது வேலை கிடைப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று லேசான தடுமாற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் வரும். மேலதிகாரிகள் உங்கள் தலை மேல் பெரிய பாரத்தை இறக்கி வைப்பார்கள். எல்லாவற்றையும் சமாளிக்க தெளிவான சிந்தனை தேவை. மனக்குழப்பம் அடைய வேண்டாம். எந்த முடிவாக இருந்தாலும் தைரியமாக எடுங்கள். உங்களுக்கு நன்மையை நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு ஏற்படும். ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். சில பேருக்கு அஜீரண கோளாறு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இருந்தாலும் இன்று உங்களுடைய முன்னோர்கள் வழிபாட்டை தவற விடாதீங்க. மாணவர்களுக்கு ஒரு சிலருக்கு படிப்பு சிக்கல் வர வாய்ப்பு உள்ளது. கூடா நட்புடன் சேர வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனசு ரொம்ப ரொம்ப அமைதியா இருக்கும். நேற்றைய தினம் தீபாவளியை கொண்டாடி சோர்ந்து போய் இருப்பீங்க. சில பேருக்கு ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு விலகி குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். மூன்றாவது நபரை நம்ப வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு பண பிரச்சனை சரியாகும். வார கடன் வசூல் ஆகும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். வாகனம் ஓட்டும் போது கவனத்துடன் இருக்கவும்.
விருச்சிகம்
விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று பண பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நிறைய செலவு செஞ்சு இருப்பீங்க. அதை ஈடு கட்ட முடியாமல் இப்போது திணறப் போகிறீர்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. கந்துவட்டி வாங்காதீர்கள். நிலைமையை சமாளிக்க தேவையை குறைத்துக் கொள்ளுங்கள். வேறு வழி இல்லை. இந்த நேரத்தில் கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்காத முடியாத சூழ்நிலை உண்டாகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். நேற்று வேலையில் ஓய்வே இருந்திருக்காது. இருந்தாலும் இன்று காலை எந்திரிக்கும்போது உற்சாகம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் உற்சாகமாக வேலை செய்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும். மாமியார் மருமகள் உறவு வலுபெறும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். நேற்று தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு சுறுசுறுப்பாக இன்று உங்களுடைய அன்றாட வேலையை தொடங்கி இருப்பீர்கள். சில பேருக்கு வயறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முன்னோர்கள் வழிபாட்டை மறக்காதீங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நெருக்கடியான நாளாக இருக்கும். வேலையில் தேவையில்லாத பிரச்சினை வர வாய்ப்புகள் உள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டாம். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். குறிப்பாக வெளிநாட்டில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்கணும். வேலை விஷயத்தை குடும்ப விஷயத்தோடு சேர்க்காதீங்க.வேலை டென்ஷனை குடும்பத்தில் வந்து காட்டாதீங்க.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று முன்னோர்கள் வழிபாட்டில் மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்துடன் சந்தோஷமுடன் நேரத்தை செலவு செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். வேலை சுமையும் அதிகமாக இருக்கும். அதனால் முன்கோபம் வரும். இருந்தாலும் கொஞ்சம் அனுசரித்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளிடம், பெரியவர்களிடம் முன்கோபத்தை காமிக்க வேண்டாம்.