
களுத்துறை, நாகொட – கல்லஸ்ஸ சந்திக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று இன்று (08) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸொன்றே வீதியை விட்டு விலகி சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 13 பேர் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது குறித்த பஸ்ஸில் சுமார் 60 பேர் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
