இன்றைய ராசிபலன் - 11.11.2023..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று எல்லா வேலையையும் சீக்கிரமா முடிச்சுட்டு பண்டிகை வேலை தொடருவதில் ரொம்பவும் ஆர்வமாக இருப்பீர்கள். சுறுசுறுப்பு இருக்கும். தீபாவளியை எதிர்பார்த்து மன நிறைவோடு காத்துக் கொண்டிருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியை நிறைவாக இருக்கும். சந்தோஷத்தில் நிறைய காசும் செலவாக வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதை, பணத்தை கொஞ்சம் கம்மியா செலவு செஞ்சா, மாச கடைசியில் கஷ்டம் வராது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். சில பேருக்கு விடுமுறை இருக்கும். வீட்டில் உறவினர்களின் வருகையால் சந்தோஷம் இருக்கும். இன்று வேலை செய்பவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது விலை உயர்ந்த பொருட்களை கொஞ்சம் ஜாக்கிரதையாக வச்சுக்கணும். ஷாப்பிங் செய்யும்போது குழந்தைகளின் மீது கவனம் இருக்கட்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் வேலை பல அதிகமாக இருக்கும். அதனால் மன அழுத்தம் இருக்கும். டென்ஷனிலேயே இந்த நாள் ஓடும். கவலைப்படாதீங்க இந்த நாள் இறுதியில் எல்லா வேலையும் நல்லபடியாக முடித்த திருப்தி கிடைக்கும். கணவன் மனைவிக்கடையே கருத்து வேறுபாடு வரும். இந்த நாள் இறுதியில் அந்த கருத்து வேறுபாடு சுமூகமாக நிறைவு பெறும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று புது வாய்ப்புகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு, வியாபாரத்தில் லாபம், எல்லாம் நல்லபடியாக கிடைக்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். பண வரவு நிறைவாக இருக்கும். குடும்ப உறவினர்களிடம் கவனத்தோடு பழக வேண்டும். உறவுகளை வெறுக்கவும் வேண்டாம். அதற்காக ரொம்ப நெருங்கவும் வேண்டாம். அளவோடு பழகினால் உறவு நீடிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லேசான மன குழப்பம் இருக்கும். எந்த முடிவை எடுப்பது என்பதில் தடுமாற்றம் இருக்கும். சுப செலவுகள் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சில பேருக்கு லீவு இருக்காது. அவசர அவசரமாக பணிகளை முடிக்க வேண்டிய சூழல் அமையும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. கூட்டமாக இருக்கிற இடத்துக்கு நீங்க போகாதீங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா வேலைகளிலும் அதிக ஈடுபாடு செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் தீபாவளி பலகாரங்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எல்லா வேலைகளும் சிறப்பாக அமையும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்தலும் புரிதலும் இருக்க வேண்டும். இல்லை என்றால் பண்டிகை நாளில் சண்டை வர வாய்ப்பு உள்ளது. முன்கோபத்தை குறைக்கவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். பண்டிகைக்கு தேவையான விஷயங்களை இன்றே செய்ய தொடங்கி விடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்யும் பணியிலும், பலகாரங்கள் செய்யும் பணியிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நிதி நிலைமை சீராக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். பண்டிகை நாட்களில் எல்லாரும் பிசியா தான் இருப்பாங்க. ஆனா, உங்களுக்கு இன்னைக்கு ஓய்வு கிடைக்கும். நிம்மதியா தூங்குவீங்க. நல்ல சாப்பாடு சாப்பிடுவீங்க, நேரத்தை சந்தோஷமாக கழிப்பீர்கள். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று தீபாவளி பர்ச்சேஸ் செய்ய வாய்ப்புகள் உள்ளது. சுப செலவு ஏற்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பு திட்டங்களை தொடங்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். விவசாயிகள் லாபம் பெறக்கூடிய நாள் இது. வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவு நிறைந்த நாளாக இருக்கும். பண்டிகை என்றாலே எல்லோருக்கும் செலவு வரும். இருந்தாலும் உங்களுக்கு சின்ன சின்ன கடன் பிரச்சனைகள், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டிய கட்டாயம், சீட்டு கட்ட வேண்டிய பிரச்சனையில் சிக்கி இருப்பீர்கள். பண்டிகை தினத்தோடு சேர்ந்து இந்த பிரச்சனையும் கொஞ்சம் கருத்தை நெரிக்கும். அதிக வட்டிக்கு கடன் வாங்காமல் பார்த்துக்கோங்க. சிந்தித்து செயல்பட்டால் நன்மை நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. எதிலும் அவசரப்பட வேண்டாம். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேலையில் சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவும், புதிய வேலை கிடைக்கும் வரை பழைய வேலையை விடாதீங்க. யாராக இருந்தாலும் அதுதான். நேரத்தை அனாவசியமாக செலவழிக்காதீங்க. காலம் போனால், திரும்பவும் கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். ஆனால் அலைச்சல் இருக்கும். உடல் சோர்வு இருக்கும். தலைவலி வர வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் பார்த்துக்கோங்க. தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. வியாபாரம் தொழில் வேலை எதுவாக இருந்தாலும் பொய் சொல்வதை குறைத்துக் கொள்ளுங்கள். அதாவது சமாளிப்பதற்கு கூட பொய் சொல்ல வேண்டாம். உண்மையை சொல்லி மாட்டிக் கொண்டாலும் சரி, சிக்கல் அந்த நாளில் முடிந்துவிடும். பொய் சொன்னால் அது எதிர்காலத்தை பாதிக்கும்.