Tuesday 31 October 2023

கொடிகாமத்தில் பஸ் விபத்து..!!!

SHARE


யாழ்ப்பாணம் - கொடிகாமம் - பருத்தித்துறை பயணிகள் பஸ் இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பயணிகளுடன் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு குடைசாய்ந்துள்ளது என அறியமுடிகிறது.

கொடிகாமம் - புலோலி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த பஸ் குடைசாய்ந்துள்ளதாக அறியமுடிகின்றது.

இதன்போது சில பயணிகளுக்கு காயமேற்பட்டுள்ளதோடு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


SHARE