Monday 30 October 2023

ஹன்சிகா பட டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி..!!!

SHARE

வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, அரண்மனை போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி.

சில ஆண்டுகளாகவே எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்த ஹன்சிகா 2022 ஆம் ஆண்டு சோஹேல் கதூரியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு நயன்தாரா, திரிஷா பாணியில் “மாஹா” என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்தார் ஹன்சிகா.

தற்போது மீண்டும் நடிகை ஹன்சிகா கதையின் நாயகியாக நடித்துள்ள புதிய படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் சந்திரா தயாரிப்பில், ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் “கார்டியன்”.

சபரி – குரு சரவணன் என இரு இயக்குனர்கள் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர்கள் சுரேஷ் மேனன், ஶ்ரீமான், மொட்ட ராஜேந்திரன், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹாரர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

ஹன்சிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான பார்ட்னர், MY 3 போன்ற படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை தராததால் கார்டியன் படம் நடிகை ஹன்சிகாவிற்கு நிச்சயம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
SHARE