Sunday 29 October 2023

‘இந்தியன் 2’: மீண்டும் வருகிறார் சேனாபதி..!!!

SHARE

உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி மெகா பிளாக் பஸ்டர் ஹிட் ஆன படம் இந்தியன்.

அதன்பிறகு 21ஆண்டுகளுக்குப் பின் 2017ஆம் ஆண்டில் மீண்டும் கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணி இந்தியன் 2 படத்திற்காக இணைந்து பணியாற்ற போகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான பின் சில காரணத்தினால் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்காமல் தள்ளிப்போனது. இறுதியாக 2019 ஆம் ஆண்டு இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதன் பிறகும் படப்பிடிப்பிற்கு இடையில் பல தடைகள் ஏற்பட்டாலும் ஒரு வழியாக முழு படப்பிடிப்பும் தற்போது முடிந்து விட்டது.

சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்திற்கான டப்பிங் பணியைத் தொடங்கி விட்டார் என்ற அறிவிப்பு வீடியோவை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

இந்நிலையில், தற்போது இந்தியன் 2 படத்தின் அப்டேட் நாளை (அக்டோபர் 29) காலை 11 மணிக்கு வெளியாகும் என்று லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு புகைப்படத்தில் ‘Received Copy’ என்று எழுதப்பட்டு சேனாபதி என்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்தியன் 2 நீளம் அதிகமாக இருப்பதால் இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3 படமும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

SHARE