மீசாலையில் விபத்து ; முதியவர் உயிரிழப்பு..!!!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியை சேர்ந்த பத்மநாதன் கதிர்வேல் (வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார்.
முதியவர் , யாழ்ப்பாணத்தில் இருந்து மீசாலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பேருந்தில் சென்று , இறங்கி யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
அதனால் தூக்கி வீசப்பட்ட முதியவர் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டி சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டள்ளனர்.