Friday, 7 July 2023

வியக்க வைத்த யாசகர்; இவ்வளவு கோடிக்கு அதிபதியா?

SHARE

உலகின் மிகப் பெரிய பணக்கார பிச்சைக்காரராக இந்தியா மும்பையைச் சேர்ந்த ஒரு பிச்சைக்காரர், உள்ளாராம். இவர் பிச்சையெடுத்தே நிறைய பணம் சம்பாதித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்தவர் பாரத் ஜெயின். இவர் மும்பையின் பல தெருக்களில் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு சகோதரர், அவரது தந்தையுடன் வசித்து வருகிறார்.

இவருடைய மாத வருமானம் சுமார் 60,000 முதல் 75,000 ஆயிரம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இலங்கை ரூபா மதிப்பில் ஏறக்குறைய இரண்டரை இலட்சம் ரூபா.

இந்திய ரூபா மதிப்பில் சுமார் 1.5 கோடி மதிப்புள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் 2 அறைகள் கொண்ட வீடு மும்பையில் சொந்தமாக உள்ளது.

அத்தோடு இவருக்கு சொந்தமாக 2 கடைகள் உள்ளது. அதன் வாடகையாக மட்டுமே மாதம் 30,000 ரூபா வருகின்றதாம். (இலங்கை ரூபா மதிப்பில் ஒரு இலட்சத்து 13 ஆயிரம் ரூபா)

ஆக மொத்தம் இவரது சொத்து மதிப்பு சுமார் 7.5 கோடி ரூபா மதிப்புடையது என கூறப்படுகின்றமை மக்களை வாய் பிளக்க வைத்துள்ளது.
SHARE