2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 28 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்பரீட்சைக்காக விண்ணப்பதாரிகள் நிகழ்நிலை (Online) முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலமாக அணுகலாம்.
க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறுமெனவும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் 2024இன் முதல் காலாண்டிலும் இடம்பெறுமெனவும் கல்வி அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.