Saturday, 1 July 2023

‘குமரிக்கண்டமும் சங்கத் தமிழும் ‘ நூல் வெளியீட்டு விழா..!!! (Video)

SHARE


கூத்துக் கலைச் செம்மல் அண்ணாவியார் சவிரிமுத்து மிக்கேல்தாஸ் அவர்கள் எழுதிய குமரிக் கண்டமும் சங்கத்தமிழும்
தென்மோடி கூத்து நூல் வெளியீட்டு விழா 28-06-2023 அன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் அரங்கு நிறைந்த மக்கள் நிகழ்வுடன் நடைபெற்றது. கவிஞர் தமயந்தி வரவேற்புரை வழங்கினார்.

நூலை யாழ் பல்கலைக் கழக வாழ் நாள் பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா அவர்கள் தலைமையில் வெளியிட தொழிலதிபர் செ.அமலதாசன் அவர்கள் முதற் பிரதியை பெற்றுக் கொண்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை கலாநிதி சுகன்யா அரவிந்தன் பாட தொடர்ந்து கலைப்பேரிகை. ச.ஜெயராஜா அவர்களுக்கு மலர் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. அடுத்து வரவேற்பு நடனத்தை தனஸ்ரீ உமாநாதன் தக்சாயினி மோகன் பாபு இணைந்து வழங்க ஆசியுரையை அருட் பணி ஸ்ரிபன் அடிகளாரும் வாழ்த்துரையை. அருட்பணி. அன்புராஜ் அவர்களும் சிறப்புரையை. விரிவுரையாளர் இளம்பிறை அவர்களும் மெலிஞ்சிமுனை இருதயராச. ச.ச.நிலையத்தின் சார்பில் ச. அசீஸ்குமாரும் நாவாந்துறை சென் மேரிஸ் .ச.ச. நிலையத்தின் சார்பில் எ.ஜெனாத் அவர்களும் அண்ணாவியார் மிக்கேல்தால் அவர்களின் கூத்தின் திறன் கலைக்குரிசில் நீ.வ. அந்தோனி தொடக்கம் நான்கு தலைமுறைகளாக இக்குடும்பம் இக்கூத்துக் கலையை தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் அழியாமல் அக்கறையுடன் பாதுகாத்து வளர்க்கும் பணியை எடுத்துரைத்தனர்.

பேராசிரியர். எஸ் சிவலிங்கராசா அவர்கள் தமது தலைமையுரையில் குமரிக்கண்டம் பற்றி எல்லோரும் பேசுகிறர்கள் எழுதுகிறார்கள், ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் எவரும் தொடாத விடயமாக அண்ணாவியார் மிக்கேல்தாஸ் அவர்கள் போல தொல்காப்பியத்திலிருந்தும். சங்க இலக்கியகளிலிருந்தும் தகவல் திரட்டி இசை வடிவமாக நாட வடிவில் படைத்தவர் எவருமில்லை என்றார்.

தொடர்ந்து யாழ். திருமறைக் கலாமன்ற இணை இயக்குனர் யோண்சன் ராஜ்குமார் அவர்கள் தமது அறிமுகவுரையில் ஓர் பெறுமதி மிக்க வெளியூட்டு நிகழ்வில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன் மிகப்பெரிய அண்ணாவி தலைமுறை மெலிஞ்சிமுனையில் இருந்தது . எல்லோருமே கலைக்குரிசில் நீ.வ. அந்தோனி அவர்களை தங்கள் குருவாக கொண்டுள்ளார்கள் நாங்கள் கூத்துக்கென ஓர் இணையதுவத்தை முதன் முதலாக உருவாகியது கலைக்குரிசில் இணையத் தளமாகும். அதன் மூலமே மெலிஞ்சிமுனை பற்றிய கலைப்பதிவை அறிய முடித்தது. இன்று நிராகரிக்க முடியாத. ஈழத்து தென்மோடிக்கூத்தின் மரபை பேணி வளர்க்கும் கிராமமாக மெலிஞ்சிமுனை திகழ்கின்றது அந்த வகையில் திரு.மிக்கேல்தாஸ் அவர்கள் குமரிக்கண்டம் சங்கத்தமிழும் நூலின் மூலம் அதற்கொரு மகுடத்தை சூட்டி யாருமே சிந்திக்காத தமிழர்களின் மூலவேர்களை தேடிச் செல்கின்ற பயணத்தை தொடர்ந்திருக்கின்றார் என்றார்.

பேராசிரியர் ஜெய்சங்கர் தனது நயப்புரையில் குமரிக்கண்டமும் சங்கத்தமிழும் என்ற நூால் பழந்தமிழ் சங்க இலக்கிய மொழியில் வரலாற்று ஆதாரங்களை கொண்டு கடந்த காலத்துடன் கூடிய இன்றைய சமகாலத்தை பதிவு செய்திருப்பதாக விளக்கினார். தொடர்ந்து நூலாசிரியர் அண்ணாவியார் மிக்கேல்தாசிற்கு பேராசிரியர் - எஸ். சிவலிங்கராசா அவர்கள்பொன்னாடை போர்த்தி கூத்தரசன் எனும் விருது வழங்கி சிறப்பு செய்து கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து நூலின் சில பாடல்களை கலைஞர்கள் மேடையில் பாடினார்கள். பின் அண்ணாவியார் மிக்கேல்தாஸ் ஏற்ப்புரை வழங்கினார் செல்வி. சாதனா லூக்காஸ் நன்றியுரை வழங்க திரு, மரியதாஸ் நிலோசன் விழா நிகழ்ச்சியை சிறப்புற தொகுத்து வழங்கினார்.














SHARE