Saturday, 8 July 2023

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!!

SHARE

இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது .

இந்த வருடம் வெளிநாட்டு வேலைக்காக சென்றவர்களின் எண்ணிக்கை 150,000 ஐத் தாண்டியுள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா கூறுகையில்,

இந்த வருடத்தில் சுமார் மூன்று இலட்சம் பேரடங்கிய தொழிலாளர்கள் கொண்ட குழுவொன்று வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 311,000 பேர் வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பித்திருந்தனர். முக்கியமாக கட்டார், குவைத், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்லும் நிலை காணப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், ருமேனியாவிலும் ஜப்பானிலும் அதிக வேலைவாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆகையால் இலங்கையர்கள் அங்கு செல்லும் போக்கு அதிகம் காணப்படுகின்றது.

மேலும் திறமையான தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார் .
SHARE