மீண்டும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதி! ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!!!
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (07.07.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 300 ரூபா மட்டத்தில் காணப்படுகின்றது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 302. 17 ரூபாவாகவும் விற்பனை விலை 320.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 300.88 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை விற்பனை விலையும் 316 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 302 மற்றும் 317 ரூபாவாக அதிகரித்துள்ளது.