Thursday, 6 July 2023

ஏ- 9 வீதியில் சிறுவனை மோதிய வாகனம் : சம்பவ இடத்திலேயே சிறுவன் பலி..!!!

SHARE


பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் ஏ -9 வீதியில் பாதை மாறுவதற்காக துவிச்சக்கரவண்டியில் வீதியின் ஓரமாக நின்று கொண்டிருந்த சிறுவனை யாழ். நோக்கி வேகமாக பயணித்த கப் ரக வாகனம் ஒன்று மோதித்தள்ளியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் இறந்தவர் பளை முல்லையடியைச் சேர்ந்த 12 வயதான ராஜபாஸ்கரன் ஐதுர்சிகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE