Saturday, 8 July 2023

சூரிய பெயர்ச்சியால் ஜூலை 17 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப் போகுது..!!!

SHARE

நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.

சூரியன் நல்ல நிலையில் இருந்தால், அவர்கள் அரசு வேலைகள் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் மற்றும் அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்கும். மேலும் நல்ல உயர் பதவிகளை வகிக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

அந்த வகையில் சூரியன் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் ஜூலை 17 ஆம் தேதி சந்திரன் ஆளும் கடக ராசிக்குள் நுழைகிறார். சூரியன் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக கடகம் செல்லும் சூரியனால் 3 ராசிக்காரர்கள் நல்ல பண வரவையும், தொழிலில் நல்ல வளர்ச்சியையும் காணப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.


மேஷம்

மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பரம்பரை சொத்துக்களில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இக்காலத்தில் அந்த சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்கலாம். தாயாரின் முழு ஆதரவு கிடைக்கும். மேலும் சூரியனின் அருளால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியையும், லாபத்தையும் பெறக்கூடும்.


துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றிகள் கிடைக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபத்துடன் வளர்ச்சியும் ஏற்படும். புதிய தொழிலைத் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

மீனம்

மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் நீதிமன்ற வழக்குகளில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். இதுவரை ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இப்பெயர்ச்சிக்கு பின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
SHARE