Monday, 10 July 2023

இன்றைய ராசிபலன் - 10.07.2023..!!!

SHARE


மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்புடன் செயலாற்றக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. எதிலும் வாஞ்சையுடன் இருப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே புன்முறுவல் தேவை. அனவசியமான இடங்களில் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல ஒரு உணர்வு ஏற்படும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பயணங்களின் பொழுது வேகம் தவிர்க்கவும். கணவன் மனைவியிடையே பேச்சு வார்த்தைகளில் சூடான வார்த்தைகளை வீசாதீர்கள்.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. செய்ய நினைத்ததை செய்து முடிப்பதில் சில இடையூறுகள் வரக்கூடும் எனினும் விடாமுயற்சியை கைவிடாமல் இருப்பது நல்லது. புதிய நண்பர்களின் அறிமுகம் நன்மை தரும். பயணங்கள் அனுகூல பலன் கொடுக்கும்.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாராட்டுக்கள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. முயற்சிக்கு உரிய அங்கீகாரம் பெறுவீர்கள். பெற்றோர்களுடைய பேச்சை காது கொடுத்து கேளுங்கள். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும்.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ணங்கள் எதிர்மறை பலன்களை கொடுக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். சீரற்ற மனநிலையை சரிபடுத்துங்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே அக்கறை தேவை. திடீர் அதிர்ஷ்டம் வரும்.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். சாதகமற்ற அமைப்பு என்பதால் பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. உங்கள் உடன் இருந்து கொண்டே உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவதற்கு வாய்ப்பு உண்டு. இறை சிந்தனையில் நாட்டம் செல்லும்.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத அதிர்ஷ்டம் வரக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான தருணமாக இருக்கப் போகிறது. வீண் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மனோதிடத்தை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள்.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. மற்றவர்களுடைய கருத்துகளுக்கு வாய்ப்புகள் கொடுப்பது உத்தமம். தொலைதூர இடங்களில் இருந்து சுப செய்திகளை பெறுவீர்கள். பயணங்கள் வெற்றி தரும்.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எவரையும் எதிர்க்கும் துணிச்சலுடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்களை சுற்றி இருக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். காரிய வெற்றிக்கு இறைவழிபாடு தேவை. மனக்கட்டுப்பாட்டை தளர்த்துவது நல்லதல்ல. கடமையில் கவனம் வேண்டும்.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு சந்தேகங்களை தவிர்ப்பது உத்தமம். பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்றம் காணக்கூடிய அமைப்பாக இருக்கிறது. துறை சார் நிபுணர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் புரிதலற்ற தன்மை மாறும். பெரியோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராத பயணங்களில் மூலம் திருப்பங்கள் நடக்கும்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உழைப்பிற்கு உரிய பலன் கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு. சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பு புதிய யுத்திகளை கையாளுவது நல்லது. நிலையற்றதை நினைத்து கவலைப்படாதீர்கள் நிலையானதை தேடுங்கள்.
SHARE