Friday, 7 July 2023

இன்றைய ராசிபலன் - 07.07.2023..!!!

SHARE


மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்ப்புகள் பல வரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உங்களுடைய சிந்தனையை தெளிவாக வைத்திருப்பது நல்லது. பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். பயணங்களில் பொழுது புதிய அனுபவங்களை பெறுவீர்கள். எதிர்பாராத விஷயம் ஒன்று நடக்கும்.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நல்ல வாய்ப்புகளை பெறக்கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மனப் பிரச்சனைகள் நீங்கும். எதிலும் வெற்றிக்கான கூடுதல் உழைப்பை கொடுப்பது நல்லது. தர்மம் கேட்டு வருபவர்களை துரத்தி அடிக்காதீர்கள்.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் பனிப்போர் முடிவுக்கு வரும். வேலைகளில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள் அலட்சியம் வேண்டாம். பயணங்களின் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. லாபம் நினைத்தபடி இருக்கும்.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். இதுவரை இழுபறியில் இருந்து வந்த பணத்தொகை கைக்கு கிடைக்கும். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நினைத்த வேலை அமையும் வாய்ப்பு உண்டு. இறை வழிபாட்டில் கூடுதல் நம்பிக்கை கொள்வீர்கள்.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பல தரப்பட்ட சிந்தனைகளில் மூழ்கிக் கிடப்பீர்கள் இதனால் புலம்பிய குட்டை போல இருப்பீர்கள். தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் பெரியோரின் பேச்சுக்கு மதிப்பு கொடுங்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதை காலதாமதம் செய்யுங்கள்.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் முழு மனதோடு செய்வது நல்லது. நம்பிக்கை இல்லாமல் எதையும் மேற்கொள்ளாதீர்கள். கணவன் மனைவிக்குள் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். உழைப்பால் உயரக்கூடிய நாளாக இருக்கப் போகிறது.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பற்றி குடும்பத்தில் பேசி பெரிதாக்காதீர்கள். நீங்கள் ஒன்றும் நினைக்க அதே நேர்மாறாக நடக்கும் எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுப காரியங்கள் கைகூடி வரும்.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எண்ணியது எண்ணிய படி நடைபெறக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. மூன்றாம் மனிதர்களிடம் புதிய பொறுப்புகளை நம்பி ஒப்படைக்க வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள் இதனால் சோர்வுடன் காணப்படுகிறீர்கள். மன உளைச்சல் குறையும்.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் அலைச்சல் இருக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. எந்த ஒரு காரியத்தையும் திட்டமிடாமல் செயல்படுத்தாதீர்கள். குடும்பத்தில் முக்கிய பொறுப்புகளை தட்டி கழிக்காதீர்கள். தங்களைப் பற்றிய தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள். குறுக்கு வழியில் சிந்தித்தால் ஆபத்து வரும்.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியுடன் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. எதிர்பார்த்த விஷயங்களில் மனநிறைவு கிடைக்கும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்களில் சாதக பலன்களை பெறுவீர்கள்.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாராட்டுகள் குவிய கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுவீர்கள். தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். நயமான பேச்சாற்றலால் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். இழந்த ஒன்றைப் பற்றிய சிந்தனையை உதறித் தள்ளுங்கள்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துயர் நீங்கி இன்முகத்துடன் காணப்படுவீர்கள். சகோதர சகோதரிகளுக்குள் இருந்து வந்த மன கசப்புகள் மாறும். எதிர்பாராத பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவினர்கள் மூலம் அனுகூல பலன் காணலாம். இடமாற்றம் ஒரு சிலருக்கு மன அமைதியை கொடுக்க வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் மேம்படும்.
SHARE