நல்லூர் ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் பூசகர்களிடையே குழப்பம்; மஹோற்சவத்திலும் இழுபறி..!!!
யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடின் காரணமாக ஆலயத்தின் மகோற்சவம் தடைப்படுள்ளது. வழிபடுவதற்காக வந்த பொதுமக்கள் ஆலயத்தில் காத்திருக்கும் அவலம் நிலவுகின்றது.
யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த பூசகர்களிடையே நீண்டகாலமாக முரண்பாடு காணப்பட்ட நிலையில் இவ் வருடத்திற்கான மகோற்சவத்தினை யார் நடாத்துவது என இரண்டு பூசர்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆலயத் திறப்பினை உரிய பூசகரிடம் வழங்க மற்றுமொரு பூசகர் வழங்காத்தால் வாய்த்தர்கம் அதிகரித்த நிலையில் நேற்றையதினம் பொலிஸார் ஆலயத்தினை பூட்டிவிட்டு இன்று நீதிமன்றில் திறப்பை ஒப்படைப்பதாகவும் அங்கு உரிய ஆதாரங்களை காட்டி பெற்றுக் கொள்ளுமாறும் ஆலயத் திறப்பினை எடுத்துச் சென்றுள்ளனர்.
இன்றையதினம்(09) காலை 10 மணியளவில் ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் பூசகர்களினுடைய முரண்பாடால் மகோற்சவம் தடைப்பட்டுள்ளது. நீதிமன்றில் இன்று வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவுள்ளது.
ஆலயக் கதவு மூடப்பட்டுள்ள நிலையில் வழிபடுவதற்காக வந்த பொதுமக்கள் காலைமுதல் ஆலயத்திற்கு வெளியில் காத்திருக்கும் அவலம் நிலவுகின்றது.
யாழ்ப்பாண இந்து ஆலயங்களில் அண்மைக்காலங்களாக உள்ளக முரண்பாடுகள் அதிகரித்துவருகின்றன. அண்மைய நிகழ்வு ஒன்றில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் இதனை வெளிப்படையாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.