தங்க விலையில் மேலும் வீழ்ச்சி..!!!
தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 162,000 ரூபாவாக நிலவியது.
அத்துடன் 22 கரட் தங்கம் 148,000 ரூபாவாக நிலவி இருந்தது.
டொலரின் பெறுமதியானது இந்த ஆண்டு சுமார் 25 சதவீதம் வீழச்சியடைந்துள்ளது.
இன்றையதினம் வர்த்தக வங்கிகளிலும் டொலர் பெறுமதி ஓரளவுக்கு குறைவடைந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றின் கடன்கள் மூலம் டொலர்கள் உட்பாய்ச்சப்படவுள்ளன.
இதன் காரணமாக டொலர் பெறுமதி மேலும் குறைவடையும் சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருந்தாலும் இந்த ஆண்டின் இறுதியில் டொலர் பெறுமதி மீண்டும் 350 ரூபாவைத் தாண்டி அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நாணய சந்தை அல்லது முதலீட்டுச் சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எவ்வாறாயினும், கடந்த காலங்களிலும் இவ்வாறான கணிப்புகள் வெளியாக்கப்பட்டு வந்தாலும், இலங்கை ரூபாய் நன்கு ஸ்திரமடைந்து வருகிறது என்ற கருத்தை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களிலும் இலங்கை ரூபாய் ஸ்திரமான நிலைமையில் இருக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் தங்கத்தின் விலையும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
இன்றையதினம் தங்கத்தின் விலையானது பின்வருமாறு நிலவியது.
24 கரட் ஒரு பவுன்- 158,000
22 கரட் ஒரு பவுன்- 146,000
டொலர் விலை இன்னும் குறையும் பட்சத்தில் தங்கத்தின் விலையும் மேலும் குறைவடையும் என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.