உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு மைத்திரி விஜயம்..!!!
யாழ் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் புனரமைப்பு செய்யப்பட்ட மைதானம் இலங்கையின் 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (30) காலை திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
நாடு முழுவதும் அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய 100 பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின்கீழ் , 3.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் உடுப்பிட்டி மகளீர் கல்லூரி மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர். சஜின் டி வாஸ் குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.