யாழில். ஹெரோயின் நுகர்ந்த இளைஞன் உயிரிழப்பு..!!!
யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
யாழ்.நகரை அண்டிய பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளைஞன் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தில் ஹெரோயின் போதை பொருளை ஊசி மூலம் தனது உடலில் செலுத்திய வேளை மரணம் சம்பவத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞன் போதைக்கு அடிமையானவர் எனவும் , ஏற்கனவே போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.