மானிப்பாய் வீதியில் சாகசம் காட்டிய இளைஞன் மறியலில்..!!!
போக்குவரத்து நிறைந்த வீதியில் சாகசம் காட்டிய இளைஞனை மல்லாகம் நீதவான் நீதிமன்று விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சன நடமாட்டம் அதிகமான நேரத்தில் போக்குவரத்து நெரிசல்கள் காணப்பட்ட நிலையில் வீதியில் வேகமாக வாகனத்தினை செலுத்தி , சாகசம் காட்டியதுடன் , வீதியில் போத்தல் ஒன்றையும் உடைத்துள்ளார்.
இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சாகசத்தில் ஈடுபட்ட சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞனை கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட இளைஞனை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இளைஞனை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.