Friday, 30 June 2023

யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் தீப்பிடித்து முற்றாக எரிந்தது..!!!

SHARE

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பயணிகள் பஸ் ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதன்போது, குறித்த பஸ் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
SHARE