இந்த ராசியில பிறந்தவங்க ரொம்ப அழகா இருப்பாங்களாமே...உங்க ராசி இதுல இருக்கா?
12 ராசிக்காரர்களுக்குமே வெவ்வேறு விதமான குணாதிசயங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் சில ராசிக்காரர்கள் மிகுந்த அழகுள்ளவர்களாகவும் மற்றவர்களை ஈர்க்கும் விதமாகவும் இருப்பார்களாம்.
சரி இனி எந்தெந்த ராசிக்காரர்கள் என பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அழகிய கண்கள், மற்றும் அழகான புன்னகை அப்பாவித்தனமான முகத்துடன் இருப்பார்களாம். அவர்களது உதடுகள் மற்றும் புருவங்கள் மிகவும் அழகாகவும் இருக்குமாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களிள் உடலமைப்பு மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். இவர்கள் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர்கள் மட்டுமில்லாமல் கம்பீரமான தோற்றம் கொண்டவர்களும் கூட. இவர்களின் ரம்மியமான தோற்றமும் சிரிக்கும் முகபாவமும் இவர்களை அழகான ராசிக்காரர்களாக மாற்றுகின்றன.
கன்னி
இவர்கள் புத்திசாலிகள் மட்டுமில்லாமல், மயக்கும் தோற்றம் கொண்டவர்கள். மிருதுவான நெற்றி, அமைதியான முக நேர்த்தியுடன் அனைவரையும் வசீகரிக்கும் விதமாகவும் இருப்பார்கள்.
சிம்மம்
வசீகரமான முகம், அற்புதமான முடி, அழகான கண்களோடு இருப்பார்கள். பொதுவாக சிம்ம ராசி பெண்களை அவர்களின் உடையை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
மீனம்
இவர்கள் மெல்லிய உடல், அழகான பாதங்கள், கால் விரல்கள், நீண்ட முடி என்பவற்றைக் கொண்டிருப்பார்கள். அதுமட்டுமின்றி மீன ராசி பெண்கள் மற்றவர்களை மயக்கும் அழகுடன் காணப்படுவார்கள்.