Saturday, 3 June 2023

சூரியன் மற்றும் சனியால் அதிஷ்ட மழையில் நனைய போகும் 4 ராசிக்காரர்கள்..!!!

SHARE

வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்படும் மாற்றங்களால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் தெரியும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையின் இந்த மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன.

குறிப்பாக இம் மாதம் 15 ஆம் திகதி சூரியன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் நுழைகிறார்.

இது தவிர கும்ப ராசியில் பயணித்து வரும் சனி ஜூன் 17 ஆம் திகதி அந்த ராசியில் வக்ரமாகிறார் என்று கூறப்படுகிறது.

இந்த மாதத்தில் சூரியன் மற்றும் சனியின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கம் ஏற்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கவுள்ளது.

இப்போது 2023 ஜூன் மாதத்தில் சூரிய, சனி நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மிதுனம்

ஜூன் 15க்கு பின் மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார் மற்றும் இந்த ராசியின் 9ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார்.

இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு இம்மாதத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.

பணிபுரிபவர்கள்

பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குடும்பம்

வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள் என்று கூறப்படுகிறது.

சிம்மம்

ஜூன் 15க்கு பின் சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் மற்றும் இந்த ராசியின் 7 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார்.

இம் மாதமானது சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

தொழில்

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் மற்றும் சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

கன்னி

ஜூன் 15-க்கு பிறகு கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் மற்றும் சனி 6 ஆவது வீட்டில் வக்ரமாகிறார்.

முதலீடு

இவ் ராசிக்காரர்கள் இம்மாதத்தில் முதலீடு செய்தால், நல்ல பலன்கள் கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

வியாபாரிகள்

வியாபாரிகளுக்கு இம்மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு சில புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். இதனால் பணியிடத்தில் உங்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

ஜூன் 15-க்கு பின் மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் மற்றும் 2 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார்.

இதனால் இந்த மாதத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். என்ன தான் ராசிநாதன் சனி வக்ர நிலையில் இருந்தாலும், மகர ராசிக்காரர்களுக்கு நற்பலனை வழங்குவார்.

அதிர்ஷ்டத்தினால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

காதல் வாழ்க்கை

காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடன் இதுவரை கடனால் அவதிப்பட்டு வந்தால், இம்மாதத்தில் கடனில் இருந்து விடுபடுவீர்கள்.

ஆரோக்கியம்

ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
SHARE