Friday, 30 June 2023

நாளை முதல் மின் கட்டணம் 14.2 சதவீதத்தினால் குறைப்பு..!!!

SHARE

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

வீட்டு மின் பாவனையில் 0 முதல் 30 அலகு வரையிலான மாதாந்த நுகர்வின் 65 சதவீத கட்டணம் ஒரு அலகு 30 ரூபாவாலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்படும். மாதாந்த நிலுவை கட்டணம் 400 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக குறைக்கப்படும்.

அத்துடன் 60 அலகுகளுக்குக் குறைவான பிரிவில், ஒரு அலகுக்கான கட்டணம் ரூபா 42 இல் இருந்து 32 ரூபாவாகவும் மாதாந்த நிலுவைக் கட்டணம் ரூபா 650 இல் இருந்து 300 ரூபாவாகவும் குறைக்கப்படும்.

91 மற்றும் 120 அலகு பிரிவுகளுக்கு ஒரு அலகு 42 ரூபாவிலிருந்து 35 ரூபாயாகவும், மாதாந்த நிலுவைக் கட்டணம் 1500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாகவும் குறைக்கப்படும்.

மத வழிபாட்டுத் தலங்களுக்கு 16 சதவீதம் கட்டணக் குறைவும் குறைந்த நுகர்வு கொண்ட வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரு அலகு 10 ரூபாய். (30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது). மத வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய சக்தி அமைப்புகளை உடனடியாக நிறுவ மின்சார சபை மற்றும் லங்கா தனியார் மின்சார நிறுவனத்திற்கு நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஹோட்டல் துறைக்கு 26.3 சதவீத கட்டணமும் கைத்தொழில் துறைக்கு 9 சதவீத கட்டண குறைப்பும் அமுல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வணிக கட்டிடங்களின் மின்சார கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படும் அரச கட்டிடங்களின் மின்சார கட்டணம் ஒரு சதவீதத்தால் குறைக்கப்படும்.





SHARE