எரிபொருள் விலை குறைகிறது..!!!
ரூபாயின் பெறுமதி அதிகரித்து வருகின்ற நிலையில், அதன் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருப்பதாக நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதனடிப்படையில் பல்வேறு பொருட்கள் சேவைகளின் விலைகள் இம்மாதம் குறைவடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைவடையவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் மசகெண்ணெய் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது.
கடந்த ஒரு வார காலப்பகுதியில் இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதியும் ஏறத்தாழ 15 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த விடயங்களைக் கருத்திற் கொண்டு இம்முறையும் எரிபொருள் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இன்று இரவு 9 மணிக்கு முன்னதாக புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எனினும் விலை குறைப்பு எந்தமட்டத்தில் இருக்கும் என்று இப்போது கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.