அமெரிக்காவில் வீசிய சக்திவாய்ந்த புயலால் 24 பேர் பலி..!!!
அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மிசிசிப்பியில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய சக்திவாய்ந்த புயலினால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
புயல் காரணமாக வீடுகளின் கூரைகள், சுற்றுப்புறங்கள் என்பன தரைமட்டமாகியுள்ளன.
இதனால் ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.
மிசிசிப்பி மாநிலத்தின் சில்வர் சிட்டி மற்றும் ரோலிங் ஃபோர்க் நகரங்களே அனர்த்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் பாதிக்கப்பட்டவர்களை தேடும் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.