%20(1).webp)
யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியில், வேம்படி சந்தியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்தில் , சவரிமுத்து சகாயரூபன் (வயது 59) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.