Thursday, 26 January 2023

மின்சார சபை முடிவெடுக்கும் வரை மின்வெட்டு தொடருமாம்..!!!

SHARE

இலங்கை மின்சார சபை முடிவெடுக்கும் வரை தினசரி மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபை அதிகாரிகள் இதுவரை அறிவிக்கவில்லை என சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதவேளை, இன்று (26) முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE