Thursday, 26 January 2023

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: கிளிநொச்சி மாணவன் சாதனை..!!!

SHARE

நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18ம் திகதி இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியிருந்தது.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு தமிழ் மொழி மூல பரீட்சைக்கு 143 வெட்டுப் புள்ளியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலய மாணவன் ஜோர்ஜ் பாலசிங்கம் பிறேன்சன் 178 புள்ளிகளைப் பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் கிளிநொச்சி தெற்கு வலயத்தில் முதல் மூன்று நிலைகளை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலய மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE