
சூரியனின் உண்மையான நிறம் தொடர்பில் நாசா புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, சூரியனின் உண்மையான நிறம் வெண்மையானது என்று அமெரிக்க தேசிய விண்வௌி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் முன்னாள் விஞ்ஞானி ஸ்கொட் கெலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,“சூரியனின் உண்மையான நிறம் வெண்மை, அது பூமியில் இருந்து பார்க்கும் போது மஞ்சளாக இருப்பதற்கு காரணம் நமது வளிமண்டலம் தான்.
விண்வெளியில் சூரியனை படம் எடுக்கும் போது, அது வெண்மையாக தான் இருக்கிறது. சூரிய ஒளிக்கற்றையில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான நிறங்களும் ஒன்றிணைந்து அது வெண்மையாக தோற்றமளிக்கும்.சூரியன் பூமியில் மஞ்சளாக இருப்பதற்கு நமது வளிமண்டலம் தான் காரணம் என்றும், நீண்ட அலைவரிசை ஒளியான சிவப்பால் தான் அது மஞ்சளாக தெரிகிறது என்றும் “Latest in space” என்ற அறிவியல் பக்கம் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது.இந்த பதிவு உண்மையானது என்பதுடன் மக்கள் மத்தியில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
சாதாரண கண்களுக்கு சூரியனின் உண்மையான நிறத்தை கண்டறிவது கடினம். புவியின் வளிமண்டலத்திற்கு வௌியே சூரியனின் உண்மையான நிறத்தையும், நிறங்கள் மாற்றமடையும் சூட்சுமத்தையும் கண்டறிய முடியும்.இதேவேளை, 100 ஔியாண்டுகள் தொலைவில் "சுப்பர் எர்த்" (super earth)என்றழைக்கப்படும் உயிர் வாழ்வதற்கு உகந்ததாக கருதப்படும் இரட்டை கிரகங்களில் ஒன்று விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் இதனை கண்டறிந்துள்ளதுடன், அதற்கு ஸ்பெகியூலோஸ் -2 என்று பெயரிடப்பட்டுள்ளது.குறித்த கிரகம் பூமியை விட 30 மடங்கு வரை விசாலமானது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். நாசாவின் டெஸ் விண்கலத்தின் ஊடாக குறித்த கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.”என தெரிவித்துள்ளார்.