
வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. அக்டோபர் 7 ஆம் தேதி படம் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தை இயக்கி வரும் இயக்குனர் சுராஜ் “வடிவேலு , சந்தானம் மற்றும் யோகி பாபு ஆகிய மூவரையும் ஒரே படத்தில் இயக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகக் கூறியுள்ளாராம். நகைச்சுவை நடிப்பில் தனித்தனி காலங்களில் சிறந்து விளங்கிய இவர்கள் மூவரும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஒருவேளை அப்படி நடந்தால் அது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.