Monday, 8 August 2022

சிறுத்தை புலி உயிரிழப்பு குறித்து விசாரணை

SHARE

 


ஹட்டன், டிக்கோயா - வனராஜா சமர்வில் தோட்டப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் ஏறிய சிறுத்தை புலியை உயிருடன் பிடிக்க எடுத்த நடவடிக்கை தோல்வியடைந்தமை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக மேலதிக செயலாளர் தலைமையில் குழுவொன்று ஹட்டனுக்கு சென்றுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.


விலங்கின் இறப்புக்கு வனவிலங்கு அதிகாரிகளே காரணம் என்பது தெரியவந்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை (06) இரவு மரத்தில் பொருத்தப்பட்டிருந்த பொறியில் சிக்கிய சிறுத்தை புலியை வனவிலங்கு அதிகாரிகள் மரத்தை வெட்டி மீட்க முயற்சித்த போதிலும் காயங்கள் காரணமாக அது உயிரிழந்துள்ளது.
SHARE