Monday, 8 August 2022

யாழில் சிலிண்டர் திருடியவர்கள் கைது..!!!

SHARE

ஓட்டுமடம் பகுதியில் உள்ள லஃவ் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சிய சாலையை உடைத்து 52 வெற்றுச் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் முதன்மை சந்தேக நபர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது.

கடந்த சில நாள்களுக்கு முன் ஓட்டுமடம் பகுதியில் உள்ள லஃவ் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சிய சாலையை உடைத்து 7 லட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான 52 வெற்றுச் சிலிண்டர்கள் திருட்டுப் போயிருந்தன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளி மற்றும் நாவாந்துறை பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டடனர். சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட சிலிண்டர்களும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின் சந்தேக நபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.


SHARE