Sunday, 7 August 2022

ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு!

SHARE

 


கொவிட் தொற்று நிலைமை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த திருகோணமலை-கொழும்பு இரவு நேர தபால் புகையிரதம் இன்று (07) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.


கொவிட் தொற்று நிலைமை காரணமாக, திருகோணமலை-கொழும்பு புகையிரதம் கல்ஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

எனவே திருகோணமலையில் இருந்து வரும் பயணிகள் மட்டக்களப்பில் இருந்து வரும் இரவு நேர தபால் ரயிலுக்கு மாற்ற வேண்டியிருந்தது.

பயணிகளின் கடும் கோரிக்கையை ஏற்று மீண்டும் புகையிரதத்தை இயக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த புதிய புகையிரதம் 11 பெட்டிகளை கொண்டுள்ளது. அதில் இரண்டு குளிரூட்டப்பட்ட பெட்டிகள். 2ம் வகுப்பு மற்றும் 1ம் வகுப்பு பயணிகளின் வசதிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர மூன்றாம் வகுப்பு இருக்கைகளையும் முன்பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
SHARE